தினமணி கதிர்

திண்ணை வீடுகள்!

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி திண்ணைகளில் அமர்ந்து மனதாரப் பேசி உறவை மேம்படுத்திக் கொள்ளவும், மகிழவும் ஐம்பது ஆண்டுக்கு முன்பு வரை பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் திண்ணைகள் கட்டப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

பெ.பெரியார்மன்னன்

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி திண்ணைகளில் அமர்ந்து மனதாரப் பேசி உறவை மேம்படுத்திக் கொள்ளவும், மகிழவும் ஐம்பது ஆண்டுக்கு முன்பு வரை பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் திண்ணைகள் கட்டப்பட்டன. மாலை நேரங்களிலும், விழாக் காலங்களிலும் கூட்டம் திரண்டிருக்கும். தற்போது நிலைமை மாறியிருக்க, சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஏத்தாப்பூரில் ஏராளமான திண்ணை வீடுகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.

ஆடம்பர வீடுகள் தராத அனுபவத்தை அறிவியல் முன்னேற்றமில்லாத காலத்தில், எந்தவித நவீனக் கருவிகளுமின்றி நமது முன்னோர் கட்டிய எளிய கட்டமைப்பிலான ஓலைக்கீற்றுகள், மண் ஓடுகள் வேயப்பட்ட கூரை வீடுகளும், திண்ணை வைத்து கட்டப்பட்ட மரத்துôண் வீடுகளும், மக்களுக்குச் சுகமான வாழ்வை அளித்தது.

நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் நவீனக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்படுவது அதிகரித்ததால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமப் பகுதிகளில் நிறைந்துகாணப்பட்ட, குடும்ப உறவுகளை ஒன்றிணைத்து மகிழ வைத்த திண்ணை வீடுகளை தற்போது காண்பது அரிதாகிவிட்டது.

இந்தத் திண்ணை வீடுகள், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் காணப்படுவதோடு இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருவது வியப்பைத் தருகிறது.

இதுகுறித்து ஏத்தாப்பூரைச் சேர்ந்த முதியவர்களிடம் பேசியபோது:

'முப்பது ஆண்டுக்கு முன்பு வரை ஏராளமான திண்ணை வீடுகள் பயன்பாட்டில் இருந்து வந்தன.

காலப்போக்கில் பெரும்பாலான திண்ணை வீடுகளை அகற்றிவிட்டு, இளைய தலைமுறையினர் தற்காலத்துக்கேற்ப நவீனக் கட்டமைப்பில் வீடுகளைக் கட்டி வருகின்றனர்.இருப்பினும் இன்றளவிலும் முன்னோர்கள் கட்டிய திண்ணை வைத்த பல வீடுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT