தினமணி கதிர்

உலகம் இப்படித்தான்!

உலகில் நடைபெறும் சுவாரசியமான நிகழ்வுகள், சம்பவங்கள் சிலவற்றை அறிவோம்.

கோட்டாறு கோலப்பன்

உலகில் நடைபெறும் சுவாரசியமான நிகழ்வுகள், சம்பவங்கள் சிலவற்றை அறிவோம்.

இந்தியா, தென்கொரியா, பஹ்ரைன் நாடுகளில் ஆகஸ்ட் 15-இல் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. மிகச் சிறிய தேசிய கீதமாக, 4 வரிகளையே ஜப்பான், ஜோர்டான் ஆகிய இரு நாடுகள் கொண்டுள்ளன. நீண்ட தேசிய கீதத்தைக் கொண்ட நாடு உருகுவே. 33 நாடுகளில் வெறும் இசை மட்டுமே தேசிய கீதமாக இருக்கிறது. இரண்டு தேசிய கீதங்களைக் கொண்டதாக, ஆஸ்திரேலியா இருக்கிறது. நார்வே, லக்ஸம்பர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய 4 நாடுகளில் தேசிய சின்னமாக சிங்கம் உள்ளது.

ஐரோப்பாவின் வடக்குப் பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை. சுவீடன் நாட்டில் மே மாதத் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரையில் சூரியன் நள்ளிரவில்தான் மறையும் என்பதோடு, மறைந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் உதயமாகிவிடும். சுவீடனில் சூரிய ஒளிக்காலம் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் வரையில் நீடிக்கும். ஐஸ்லாந்தில் ஆண்டுதோறும் 'மிட்நைட்சன்' என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனைக் காணலாம். பின்லாந்து நாட்டில் கோடைக்காலத்தில் தொடர்ச்சியாக 73 நாள்கள் சூரியன் அஸ்தமிப்பது இல்லை. கனடா நாட்டில் வடமேற்குப் பகுதியில் இரு மாதங்களுக்கு சூரிய அஸ்தமனம் ஆகாமல், பகல் பொழுதாகவே நீடிக்கும்.

உலகில் ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என 1843-இல் அறிவிக்கப்பட்டது. முக்கிய நாடுகளில் உள்ள வார விடுமுறைகள்: ஞாயிறு - இந்தியா, ஐரோப்பிய நாடுகள், திங்கள்- கிரீஸ், செவ்வாய் - ஈரான், புதன்- சிரியா, வியாழன்- எகிப்து, வெள்ளி - அரபு நாடுகள், சனி- இஸ்ரேல்.

இங்கிலாந்தில்தான் முதன்முதலில் கடிதங்களை விநியோகம் செய்வதற்காக குதிரைகளைப் பயன்படுத்தினார்கள். அவ்வாறு கடிதம் எடுத்துச் செல்பவர்கள் குறிப்பிட்ட தூரம் சென்று, அவற்றை பட்டுவாடா செய்வார்கள். அந்தக் குறிப்பிட்ட எல்லையில் ஒரு கம்பம் நடப்பட்டிருக்கும். அதன்பின் வேறு நபர் அவற்றை வேறு குதிரையில் எடுத்துச் சென்று, அந்தந்தப் பகுதிகளில் பட்டுவாடா செய்வார். அவ்வாறு கம்பங்கள் நடப்பட்டிருக்கும் பகுதியை ஆங்கிலத்தில் 'போஸ்ட்' என்பார்கள். அந்தப் பெயரிலேயே பிற்

காலத்தில் தபால்களுக்கு 'போஸ்ட்' என்ற பெயர் நீடித்துவிட்டது. உலகெங்கும் 'போஸ்ட் ஆபிஸ்' என்ற

பெயருக்கு இதுதான் வரலாறு.

உலகில் முதன்முதலில் சொத்துகளின் விவரங்களைப் பத்திரத்தாள் மூலம் பதிவு செய்யும் 'முத்திரைத்தாள் சட்டம்' நெதர்லாந்து நாட்டில் 1642-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகில் 26 நாடுகளில் கடற்கரையே கிடையாது. சர்வதேசக் கடல் அமைப்பு 1948-இல் ஏற்படுத்தப்பட்டது.

உலகில் நோபல் பரிசு, பாரத ரத்னா, மகசேசே விருது ஆகிய மூன்று விருதுகள் மட்டுமே உயரிய விருதுகளாக உள்ளன. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோமன் மகசேசேவின் பெயரால் மகசேசே விருது வழங்கப்படுகிறது.

ஏலக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு கவுதமாலா. 1920-ஆம் ஆண்டில் ஏலக்காய் உற்பத்தியை முதன்முதலில் இந்த நாடு தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT