தினமணி கதிர்

அரசு பணம் வேண்டாமே....

அரசு பணத்தில் வாங்கிய கட்டில்' என்று ராஜாஜி கேட்க, பின்னர் நேரு அதை அனுப்பியதை அறிந்தார்.

DIN

இந்தியா சுந்திரம் அடைந்தவுடன் கவர்னர் ஜெனரல் பதவி நிறைவடைந்த நிலையில், மூதறிஞர் ராஜாஜி தில்லியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டார். அவர் பயன்படுத்திய அனைத்துப் பொருள்களும் சென்னைக்கு அனுப்பப்பட்டன.

'எல்லா பொருள்களும் அனுப்பிவிட்டாரா?' என்று பார்ப்பதற்கு பிரதமர் ஜவாஹர்லால் நேருவே ராஷ்டிரபதி பவனுக்கு வந்துவிட்டார். அங்கே ஒரு இரும்புக் கட்டில் மட்டுமே இருந்தது. அது ராஜாஜி பயன்படுத்திய கட்டில் என்றும் இதைக் கவனக் குறைவாக விட்டுவிட்டார்களா? என்றும் நேரு கருதி, அதை சென்னைக்கு அனுப்ப உத்தரவிட்டார். கட்டிலும் சென்னைக்கு வந்துவிட்டது.

'இந்தக் கட்டில் ஏன் இங்கு வந்தது. இதை அனுப்பச் சொல்லவில்லையே.. இது அரசு பணத்தில் வாங்கிய கட்டில்' என்று ராஜாஜி கேட்க, பின்னர் நேரு அதை அனுப்பியதை அறிந்தார். பின்னர் நேருவுக்கு ராஜாஜி எழுதிய கடிதத்தில், 'தங்கள் அன்பிற்கு நன்றி. சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கட்டில் என்னுடையது அல்ல. அரசு பணத்தில் வாங்கப்பட்டது. எப்படியோ வந்துவிட்டது. கட்டிலின் உத்தேச விலைக்கு ஒரு செக் அனுப்பியிருக்கிறேன். அரசு கருவூலத்தில் இந்தத் தொகையைச் சேர்த்துவிடுங்கள்' என்று கூறியிருந்தார்.

-ஜி.அர்ச்சுனன், செங்கல்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை!

சர்வதேச காற்றாடி திருவிழாவை பட்டம்விட்டு தொடக்கிவைத்த மோடி, ஜெர்மனி பிரதமர்!

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

SCROLL FOR NEXT