தினமணி கதிர்

தாகம் தீர்க்கும்...

மேற்கு ராஜஸ்தானின் வறண்ட தார் பாலைவனத்தில் ஆழமற்ற குளங்களை உருவாக்கி வனவிலங்குகளின் தண்ணீர் தாகத்தைப் போக்குகிறார் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஷர்வன் படேல்.

தினமணி செய்திச் சேவை

ரா.ரா.

மேற்கு ராஜஸ்தானின் வறண்ட தார் பாலைவனத்தில் ஆழமற்ற குளங்களை உருவாக்கி வனவிலங்குகளின் தண்ணீர் தாகத்தைப் போக்குகிறார் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஷர்வன் படேல்.

இவர் தனது காமிராவில் தார் பாலைவன அழகையும், அதன் குன்றுகளையும் படம் பிடிப்பதுடன் அதன் வறட்சியையும் வெளியிட ஆரம்பித்தார். அப்போது, பிளாக் பக், சின்காரா உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வழி இல்லாமல் தாகத்துடன் இறப்பதை அவர் அறிந்தார்.

இதனால் இவரது சொந்தக் கிராமத்தில் மக்கள் தாங்களே சிறிய அளவில் ஒரு குளம் வெட்டினர். அதில் மழைநீர் நிரம்பி, வன விலங்குகள் வந்து குடிப்பதை ஷர்வன் படேல் பார்த்தார். உடனே அதனை படமெடுத்து வெளியிட அது வைரலானது.

இதைப் பின்பற்றி பார்மர், ஜோத்பூர், ஜெய்சால்மர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கினர். இதுவே ஒரு சமூக இயக்கமாக மாறியது.

மேற்கு ராஜஸ்தானில் வனப் பகுதிகள் குறைவு. தோப்புகள் அதிகம் என்பதால், அவை மழைநீர்ப் பிடிப்பு மண்டலங்களாகச் செயல்படுகின்றன. ஒருகாலத்தில் பாலைவனங்களைச் சோலையாக்க சூலி தாவரங்கள் பயிரிடப்பட்டன. ஜவுளி, எஃகு தொழில் கழிவுகள் ஜோஜாரி நதியில் கலக்கப்பட்டதால், அங்கு நீர் குடித்த வன விலங்குகள் இறந்தன. அருகே வளர்ந்த நூற்றுக்கணக்கான மரங்கள் பட்டு போயின. அதற்காக நதியின் இருபுறமும் அதன் கரையையொட்டி, நன்னீரை குடிக்க ஏதுவாய் குளம் வெட்டி தண்ணீர் நிரப்பி வன விலங்குகளை குடிக்கச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

'தினம் ஒரு ரூபாய் வாட்ஸ் அப் குழு' தொடங்கப்பட்டு, நிதி சேகரிக்கப்பட்டது. நதியின் இருபுறமும் மூன்று அடி ஆழமுடைய குளங்களை வெட்டி சாதாரண நீரை நிரப்பினர். அவற்றில் சுத்தமான நீரை டேங்கர் லாரிகளில் மூலம் கொண்டு வந்து நிரப்ப, வனவிலங்குகள் வந்து தண்ணீரைக் குடித்துச் சென்றன. இதை பார்த்து அரசும் கட்டியது.

ஒரு குளம் வெட்ட 40 ஆயிரம் ரூபாய் வரையில் செலவானது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் களம் இறங்கின. சில நாள்களுக்கு ஒரு முறை மாற்று தண்ணீர் ஊற்றுகிறார்கள். மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள், சொட்டு நீர் முறைகளில் குளத்துக்கு நீர் பாய்ச்சி வன விலங்குகளை எளிதாக குடிக்க வைக்கின்றனர்.

இந்த வகையில் 130க்கும் மேற்பட்ட ஆழம் குறைந்த குளங்கள் புகைப்படக் கலைஞர் குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 400 கலைமான்கள், பாலைவன நரிகள், ஒட்டகங்கள், புலம் பெயர்ந்து வரும் பறவைகள் உள்ளிட்டவை நீரை அருந்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் கேரள வருகையின்போது விதிகளை மீறி பதாகைகள்: பாஜக மீது வழக்குப் பதிவு

100 ஆண்டுகளில் விண்வெளியில் ஒரு கோடி போ் வசிப்பா்- விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநா் ராஜராஜன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்த வெடிப்பு குணமாக....

திருப்பதி லட்டு வழக்கு: ஆந்திர நீதிமன்றத்தில் இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல்

மனஅமைதிக்கு மண்டலா ஓவியங்கள்!

SCROLL FOR NEXT