தினமணி கதிர்

சிரி... சிரி...

பொண்ணுக்கு நாங்க 30 பவுன் போடுறோம்... நீங்க என்ன போடுவீங்க?

இணையதளச் செய்திப் பிரிவு

'பொண்ணுக்கு நாங்க 30 பவுன் போடுறோம்... நீங்க என்ன போடுவீங்க?'

'அதையெல்லாம் பொண்ணுக்கு மாட்டி வீடியோ எடுத்து இன்ஸ்டாவுல 'ரீல்ஸ்' போடுறோம்!'

-முபீன், சென்னை.



'ரெண்டாம் பந்தியிலும் சாப்பிடப்போறேன்...'

'ஏன்?'

'ரெண்டாம் பந்திக்கு மெனு மாற்றமாம்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.




'உங்க மனைவி மாசமாயிருக்காங்க... வெயிட்டான பொருள் எதுவும் தூக்கக்கூடாது !'

'அவ தூக்குற ஒரே பொருள் செல்போன் தான் டாக்டர் !'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.




'இடைவேளைக்கு அப்புறம் திட்டிக்கிட்டே படம் பார்த்தீங்களா... ஏன் செகண்ட் ஆஃப் அவ்வளவு போரா?'

'ம்ஹும்... ஸ்டால்ல வாங்கின பாப்கார்ன் பழைய ஸ்டாக், அதான்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.




'சங்கு எல்லாம் ஊதியாகி விட்டது. இன்னும் போர் துவங்கவில்லையே..!'

'ஓ. டி. பி. க்கு வெயிட்டிங்காம்..!'



'மன்னர் கதி கலங்கிவிட்டாரா ?'

'ஆமாம், கை தட்டி 'யார் அங்கே?' என்றதும், புலி ஒன்று நடந்து வந்ததாம்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'அமைச்சரே... உடனே கேடயம் கொண்டு வாருங்கள்...'

'போர்க்களம் போகப்போகிறீர்களா, மன்னா?'

'மண்ணாங்கட்டி... மகாராணியைக் கோபத்தில் திட்டிவிட்டேன். பூரிக்கட்டையைத் தூக்கிக் கொண்டு வருகிறாள்!'



' வந்தால் வெட்டுவேன் என்று எதிரி போர் ஓலை அனுப்பியுள்ளான், மன்னா!'

'மாமூல் வெட்டினால் விட்டுவிடுவானா எனக் கேளுங்கள், அமைச்சரே!'

-முகமது ஆதில், சென்னை.



'என்னங்க, நான் பேசிக்கிட்டே இருக்கேன்... நீங்க ஒன்னும் பேசவில்லையே?'

'நீ வாயை மூடினால் தானே நான் பேச முடியும்!'



'உங்களைத் திருமணம் செய்த பின் உங்கள் மனைவி உங்களிடம் கண்டுபிடித்த குணாதிசயம் என்ன?'

'எனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை என்பதைத்தான்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'எனக்கு மல்லுக்கட்டுறவங்களைக் கண்டாலே பிடிக்காது...'

'அதுக்காக, மல்லு வேட்டி கட்டினவங்களோட பேசக்கூட மாட்டேன்னா எப்படி?'



'நீங்க எழுதின 'தோசை' ங்கிற கதையை மறுபடியும் போட்டிருக்காங்களே..?'

'தோசையைத் திருப்பிப் போடறது இயற்கை தானே சார்..!'



'நீ பெருக்காமல் எதுக்கு உஷா உன் வீட்டுக்காரரை பெருக்கச் சொல்றே?'

'இதுக்கு மேல நான் பெருக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காருடீ...!'



'என்னங்க... உங்க அம்மாவை ரயிலேத்திவிடப் போனப்ப ஒரு சின்ன தப்பு நடந்து போச்சுங்க...!'

'என்னாச்சு..?'

'எனக்கு வாங்கின பிளாட்பாரம் டிக்கெட்டை அவங்ககிட்ட கொடுத்துட்டு, அவங்களோட பயண டிக்கெட்டை நான் எடுத்திட்டு வந்துட்டேங்க!'



'அந்த அதிகாரியை ஏன் திடீர்னு மாத்திட்டாங்க?'

'ரொம்ப நேர்மையா இருக்காருன்னு தலைவருக்கு தொடர்ச்சியா அவரைப் பற்றி புகார் போய்க்கிட்டே இருந்துச்சாம்...!'



'டூ-வீலர்ல வச்சு எதுவும் வியாபாரமா பண்ணப் போறீங்க... எதுக்கு லோடு வண்டி வாங்கியிருக்கீங்க?'

'சமயத்துல என் மனைவியை டபுள்ஸ் அழைச்சிட்டுப் போவேன், சார்...!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

உறைந்த ஆறுகளில் நடக்கலாம்...

படப்பிடிப்பு முடிந்தது

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூலநோய் குணமாக...

தெரியுமா?

SCROLL FOR NEXT