தினமணி கதிர்

நெகிழும் சிபி சக்ரவர்த்தி!

ரஜினியின் 173-ஆவது படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தினமணி செய்திச் சேவை

ரஜினியின் 173-ஆவது படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஐந்தாவது முறையாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். குடும்பத் திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படம் குறித்தும், ரஜினியை இயக்குவது குறித்தும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், 'ஒரு காலத்தில், சிறுநகரத்திலிருந்து வந்த ஒருவனுக்கு, அவனுடைய ஃபேவரிட் நடிகரான சூப்பர் ஸ்டாரை சந்தித்துப் புகைப்படம் எடுப்பது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் அவனுடைய சினிமா ஆர்வத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றது.

அதன் பிறகு, அந்தக் கனவு ஒருநாள் நிகழும் என நம்பிக்கையுடன் இருந்தான். அது இன்று நடந்திருக்கிறது. 'கனவுகள் நனவாகும், அதிசயங்கள் நடக்கும்' என தலைவர் சொன்ன விஷயங்களையே நான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன். சில சமயங்களில், வாழ்க்கை கனவுகளைத் தாண்டி இன்னும் பெரியதாக ஆகிவிடும்.' எனப் பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT