தினமணி கொண்டாட்டம்

கமல் அரசியல் சர்ச்சை...ரஜினி மகள் பதில்!

தினமணி

ரஜினி அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... என்ற விவாதங்கள் ஒரு புறம் போய்க் கொண்டிருக்க, கமலின் அரசியல் சர்ச்சை பேச்சுக்கள் அடுத்த கட்ட விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் கமலுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும்,  வரவேற்புகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்திருந்தார். அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அரசியலுக்கு அவர் வரும் பட்சத்தில் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என கருத்து தெரிவித்தார். இந்நிலையில் கமல் அரசியலுக்கு வருவது பற்றி, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிடம் கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த சௌந்தர்யா.. "கமல் சார் என் அப்பாவின் நீண்ட கால நண்பர். எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நட்பு அது. கமல் சாருக்கு எதிலும் தீர்க்க தரிசனம் உண்டு. எதையும் தெரிந்து கொள்ளாமல் அவர் பேச மாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' என்று பதிலளித்தார் சௌந்தர்யா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT