தினமணி கொண்டாட்டம்

ஒரே படம் 9 கதாநாயகிகள் !

DIN

ஒரே படத்தில் 9 கதாநாயகிகள் இணைந்து நடிக்கவுள்ளனர். அதுவும் தென்னிந்தியாவில் முன்னணி இடங்களில் உள்ளவர்கள் இதில் இணைகின்றனர். அவர்கள் அனைவரையும் இணைத்திருப்பது மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் படம்தான். இதில் என்.டி.ஆர். வேடத்தில் நடிப்பவர் என்.டி.பாலகிருஷ்ணா. மறைந்த என்.டி.ராமாராவ் படங்களில் நடித்த போது அவருடன் பல கதாநாயகிகள் ஜோடியாக நடித்தனர். அந்த காட்சிகள் இப்படத்துக்காக மீண்டும் படமாக்கப்படுகிறது. இதையடுத்து அந்தந்த நடிகைகள் வேடத்தில் நடிப்பதற்காக பிரபலமான 9 ஹீரோயின்கள் ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
 என்.டி.ஆரின் மனைவி பசவதாரம் ஆக வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாவித்ரி கதாபாத்திரத்தில் நித்யாமேனன், சரோஜாதேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி வேடத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா வேடத்தில் ஹன்சிகா, கிருஷ்ணகுமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர். மேலும் சந்திரபாபு வேடத்தில் ராணா நடிக்கிறார். அவரது மனைவியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். ஒரே வேடத்தில் 9 கதாநாயகிகள் இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT