தினமணி கொண்டாட்டம்

சாகசப் பயணம்

DIN

ஹுலாஃப்டிங் என்பவர் குழந்தைகளுக்காக எழுதிய ஒரு நாவல் "டாக்டர் டுலிட்டில்'. இந்த நாவலை அடிப்படையாக வைத்து 1967- ஆம் ஆண்டு, "ரெக்ஸ் ஹாரிசன்' என்ற பெயரில் படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, 1998 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தன. இப்போது இதன் அடுத்தப் பாகம் வெளியாகியுள்ளது.
 தன் மனைவியை இழந்து 7 வ ருடங்களாகி விட்ட நிலையில், தனது பிரம்மாண்டமான மாளிகையில், செல்ல மிருகங்களின் துணையை மட்டுமே தூணாகக் கருதி, தனிமையில் வாழ்ந்து வருகிறார் டாக்டர் டுலிட்டில். இங்கிலாந்து நாட்டு இளவரசி நோய்வாய்பட, மர்மத்தீவு ஒன்றிற்கு மருந்து தேடிப் புறப்பட்டுச்செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாக, வேறு வழியின்றிப் பயணப்படுகிறார் டாக்டர்.
 நெருப்புக்கோழி, கரடி மற்றும் கிளி ஆகியவையும் அவரது பயணத்தில் தம்மைப் பிணைத்துக் கொள்கின்றன. டாக்டர் டுலிட்டிலின் பயணம் அதில் நடந்த சாகசங்கள் குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் விதத்தில் தயாராகியுள்ளது. மைக்கேல் ஷீன், ஜிம் ப்ரடபெண்ட் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT