தினமணி கொண்டாட்டம்

காடுகளில் நடக்கும் கதை

DIN

முழுக்க முழுக்க வனப்பகுதிகளுக்குள் நடக்கும் படமாக உருவாகி வருகிறது "ட்ரிப்'. யோகிபாபு, சுனைனா, கருணாகரன், "நான்கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் டேனிஷ் மஞ்சுநாத். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...

""வனப்பகுதிக்குள் செல்லும்ஒவ்வொருவரும் திடீர் திடீரென காணாமல் போகிறார்கள். அவர்கள் எதனால் காணாமல் போகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை அம்சம். அதற்குள் விரியும் சம்பவங்களும், திகில் நொடிகளும்தான் திரைக்கதை. த்ரில்லருடன் இணைந்த காமெடிதான் களம்.

குறும்படங்கள் மீது இருந்த காதல்தான் என்னை சினிமா நோக்கி இழுத்தது. நிறம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வெளிவந்த பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளேன். உதவி இயக்குநராக இருந்த போது யோகி பாபுவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்தக் கதைக்கான கருவை அவரிடம் சொல்லியிருந்தேன். இந்தக் கதையில் இருந்த சில சந்தேகங்களை அவருக்குத் தீர்த்து வைத்தேன். இந்தப் படம் உருவாக அவர்தான் முதல் வாய்ப்பு உருவாக்கி கொடுத்தார். அவருக்கு நன்றி. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலக்கோணம் காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் சுனைனா இதில் நடிக்கிறார். அவருக்குப் பெரும் திருப்பு முனையாக இது அமையும்'' என்றார் டேனிஷ் மஞ்சுநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT