தினமணி கொண்டாட்டம்

ரசிகர்கள் குழப்பம்

DIN


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் "சிறுத்தை' சிவா. கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான "சவுர்யம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் கார்த்தியை வைத்து "சிறுத்தை' படத்தை இயக்கினார். இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் "வீரம்' படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டடிக்க, வேதாளம், விவேகம், விசுவாசம் என அடுத்தடுத்த படங்களில் அஜித்துடன் கூட்டணி அமைத்தார் "சிறுத்தை' சிவா. கமர்சியல் இயக்குநராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட சிறுத்தை சிவா, தற்போது ரஜினியை வைத்து "அண்ணாத்த' படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.வெற்றி இயக்குநராக உள்ள "சிறுத்தை' சிவா, தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்நிலையில் ரஜினிகாந்த், சிறுத்தை சிவாவுக்கு கேக் ஊட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படம் பிறந்த நாளின் போது எடுக்கப்பட்டதா அல்லது கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT