தினமணி கொண்டாட்டம்

பிரபுதேவா உதவியாளர் இயக்கும் கதை

DIN


தமிழ் சினிமாவில் இயக்குநர், நடன இயக்குநர், நடிகர்என பன் முகங்களில் வலம் வருபவர் பிரபுதேவா. இவரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி வந்த கலைமாமணி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை ஜெ.கே.வின் ஜெ.எப். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் "பசங்க' படத்தில் நடித்த ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கிறார். பிரீத்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதே நிறுவனம் தயாரித்து வரும் "லாகின்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ரத்ன சிவா, நடன இயக்குநர் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ""சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்கள் சிவந்து கேள்வி கேட்டால் அங்கேதான் பிரச்னை ஆரம்பம்.

அப்படி ஒரு கட்டம் இந்தக் கதையில் இருக்கிறது. குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிற கதை. அதுதான் மொத்த படமும். எனக்கான, நமக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தப்போகிறேன். வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை.

அதுக்குப்பிறகு கூட சித்தார்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி,

எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. இதுதான் களம்'' என்றார் இயக்குநர் கலைமாமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT