முகப்பு
இளைஞர்மணி

9 - 12 ஆம் வகுப்பு வரை உதவித் தொகை!

9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் அரசிடமிருந்து ரூ.500 உதவித் தொகை பெற விரும்பும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அதற்கான தகுதித் தேர்வினை எழுதினால் போதும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் அரசிடமிருந்து ரூ.500 உதவித் தொகை பெற விரும்பும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அதற்கான தகுதித் தேர்வினை எழுதினால் போதும்.

சஙஙந எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையைப் பெற ஜனவரி மாதத்தில் நடைபெறும் தேர்வினை எழுத வேண்டும்.

2015-16 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாநகராட்சி நகராட்சி பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். 7 ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வில் நஇ நப பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களும் மற்ற பிரிவினர் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு www.tndge.in  என்ற இணையதளத்தைப் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லது பள்ளிகளின் தலைமையாசிரியர்களை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.