முகப்பு
இளைஞர்மணி

திருக்குறள் செயலி!

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, திருக்குறள்களை உள்ளடக்கிய ஒரு செயலி (apps) காணக் கிடைத்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, திருக்குறள்களை உள்ளடக்கிய ஒரு செயலி (apps) காணக் கிடைத்தது.

தமிழின் மிகச் சிறந்த நூலாகவும், உலகப் பொது மறையாகவும் திகழும் திருக்குறளை செல்லிடப் பேசியில் செயலி வாயிலாகப் படிக்க முடியும் என்பது தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி.

இந்தச் செயலியில் உள்ள அம்சங்களைக் காண்போம்.

ஆன்ட்ராய்டு இயங்கு தள மென்பொருளைக் கொண்டு இயங்கும் செல்லிடப் பேசிகளில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இதில், 1330 குறள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயலியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் திருக்குறள் கிடைக்கின்றது.

ஒவ்வொரு குறளுக்கும் விளக்க உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, நாம் படிக்கும் திருக்குறளை முகநூல், சுட்டுரை ஆகிய சமூக வலைத்தளங்களிலும் பகிர முடியும் என்பது மற்றொரு சிறப்பு.

உலகின் அனைத்து பகுதிகளுக்கும் திருக்குறள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →