முகப்பு
இளைஞர்மணி

ரூபிக்ஸ் கனசதுர விளையாட்டில் சாதனை

ரூபிக்ஸ் கனசதுர புதிரை 5.25 விநாடிகளில் விடுவித்து சாதனை படைத்த கொலின் பர்ன்ஸ் ரூபிக்ஸ் கன சதுர விளையாட்டு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலை பேராசிரியரும்,சிற்பியுமான எர்னோ ரூபிக் என்பவரால் 1974-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Updated On : 28 செப்டம்பர், 2015 at 7:56 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

ரூபிக்ஸ் கனசதுர புதிரை 5.25 விநாடிகளில் விடுவித்து சாதனை படைத்த கொலின் பர்ன்ஸ் ரூபிக்ஸ் கன சதுர விளையாட்டு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலை பேராசிரியரும்,சிற்பியுமான எர்னோ ரூபிக் என்பவரால் 1974-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

6 பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட சிறு சிறு சதுரங்களால் ஆனதே ரூபிக் கனசதுரம். இந்தச் சிறு கனசதுரங்களை 6 பக்கங்களிலும் திருப்பிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிகக் குறைந்த நேரத்தில், 6 பக்கங்களிலும், ஒரே விதமான வண்ணங்கள் வரும்படியாக மாற்றி அமைப்பதில் இந்த விளையாட்டின் வெற்றி அடங்கியுள்ளது.

Advertisement

ஆனால் அப்படி 6 பக்கங்களிலும் ஒரேவிதமான வண்ணங்கள் வரும்படியாக மாற்றி அமைப்பது அவ்வளவு எளிதல்ல.

அமெரிக்காவைச் சேர்ந்த கொலின் பர்ன்ஸ் என்ற இளைஞர் பென்சில்வேனியாக மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏப்ரல் மாதம் 2015-இல் நடைபெற்ற ரூபிக்ஸ் கனசதுர விளையாட்டில் கலந்துகொண்டு வெறும் 5.25 விநாடிகளில் ரூபிக்ஸ் கனசதுரைப் புதிரை விடுவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.