பள்ளிகள், அலுவலகங்களில் புகைப்படங்கள், ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒரே நேரத்தில் பலரும் பார்க்கும் வகையில் காட்சியாகத் திரையில் தெரியப்படுத்துவதற்கு புரொஜக்டர் கருவியின் தேவை இன்றியமையாததாக உள்ளது. தற்போது வீடுகளில் கூட பெரிய அளவிலான திரையில் திரைப்படங்களைக் காணும் வகையில் புரொஜக்டரின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திரையே இல்லாமல் காற்றிலேயே மேற்படி ஒளிபரப்புத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிதாக வரவுள்ளது ஏரியல் டிஸ்பிளே புரொஜக்டர் கருவி. இக்கருவி மூலம் 90 அங்குலம் திரை அளவில் காட்சிகளை ஒளிபரப்ப இயலும். இதன் மூலம் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஆகாய மார்க்கமாக காட்சிகளை ஒளிபரப்பச் செய்யலாம்.
இருவேறு வகையான ஒளிக்கற்றைகளை செலுத்தி, திரும்பப் பெறும் தொழில்நுட்பம் மூலம் இந்த ஒளிப்பரப்பு கருவி வடிமைக்கப்பட்டிருக்கிறது.
வரும் 2020ஆம் ஆண்டில் வெளியிடும் வகையில் ஜப்பானின் மிட்சுபிஸி நிறுவனம் இக்கருவியைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.