இளைஞர்மணி

உலகச் சந்தையில் இந்தியத் தயாரிப்பு மடிக்கணினி

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்மார்ட்ரான் நிறுவனம், முழுவதும் இந்திய தயாரிப்பாக ஸ்மார்ட்போன், மடிக்கணினிகளை தயாரித்து வெளியிடுகிறது.

எஸ். நாராயணன்

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்மார்ட்ரான் நிறுவனம், முழுவதும் இந்திய தயாரிப்பாக ஸ்மார்ட்போன், மடிக்கணினிகளை தயாரித்து வெளியிடுகிறது. இந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்ரான் டி - புக் மடிக்கணினி அண்மையில் தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

இந்த ஸ்மார்ட்ரான் டி - புக் கணினியானது, விண்டோஸ் 10 இயங்குதளம், இண்டெல்கோர் - எம் புராசஸர், 4 ஜிபி நினைவகத் திறன் (தஅங, 128 ஜிபி சேமிப்புத் திறன் (HARDDISK), 12.2 அங்குல தொடுதிரை, 5 எம்பி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமராவுடன் 10 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்கும் பேட்டரி ஆற்றல் உள்ள வகையில் வெளி வந்துள்ளது.

தற்போது இணையதளம் வழியாக ஸ்மார்ட்ரான் டி- புக் விற்பனை நடைபெறுகிறது. விலை ரூ.39,999.

இது தவிர, இந்நிறுவனம் இம்மாத இறுதிக்குள் தனது தயாரிப்பான ஸ்மார்ட் போன்களையும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

குறைந்தவிலையில் லெனோவா மடிக்கணினி:

இந்தியச் சந்தையைக் கருத்தில் கொண்டு சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் மிகக் குறைந்தவிலையில் மடிக்கணினியை கடந்த வாரம் முதல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. லெனோவா ஐடியாபேட் 100 எஸ் என பெயரிடப்பட்ட இந்த மடிக்கணினியானது, விண்டோஸ் 10 இயங்குதளம், இண்டெல் ஆடெம் புராசஸர், 2 ஜிபி நினைவகத்திறன், 32 ஜிபி சேமிப்புத்திறன், 11.6 அங்குல அளவுள்ள திரை. 0.3 எம்பி முன்பக்க கேமராவுடன் 8 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கும் பேட்டரி ஆற்றல் உள்ள வகையில் வெளி வந்துள்ளது. இதன் குறைந்தபட்ச விலை ரூ.14,490. தற்போது இணையதளம் மூலம் விற்பனை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT