இளைஞர்மணி

சிறுதொழில்களைப் பதிவு செய்ய உத்யோக் ஆதார் எண்!

தொழில் முனைவோர் தங்கள் தொழிலை நடத்துவதற்காக உரிமம் பெறுவதற்கு பதிவுச் சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் நோக்கில் உத்யோக் ஆதார் எண்ணை தொழில் முனைவோர் பெறுவதற்கான வழிமுறையை இணைய தளம் வாயிலாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

எம். அருண்குமார்

தொழில் முனைவோர் தங்கள் தொழிலை நடத்துவதற்காக உரிமம் பெறுவதற்கு பதிவுச் சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் நோக்கில் உத்யோக் ஆதார் எண்ணை தொழில் முனைவோர் பெறுவதற்கான வழிமுறையை இணைய தளம் வாயிலாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்ய EM PART - I, EM PART - II  என்ற இரண்டு சான்றுகளைப் பெற வேண்டியிருந்தது. அதில் EM PART - I  என்பது தற்காலிக பதிவுச் சான்று. தொழிலைத் துவங்குவதற்கு முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து இச்சான்றிதழைப் பெறலாம். தொழில் நிறுவனத்தைத் திறந்து இயந்திரங்களை அமைத்து உற்பத்தியைத் துவங்கிய பிறகு EM PART - II  என்ற நிரந்தரப் பதிவுச் சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தது.

ஆன்லைன் மூலம் பதிவு சான்று பெற முடியாத சில வகை தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கு ஆன்லைனில் மாவட்டத் தொழில் மையம் மூலம் (Through DIC) சான்று பெறுவதற்கு என்று சில வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால் அதனைச் சரிபார்த்து அதற்கான பதிவுச் சான்றிதழை இ-மெயில் மூலம் மாவட்ட தொழில் மையம் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். இது தான் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்தது.

ஏற்கெனவே  EM PART - I, EM PART - II  ஆகிய சான்றிதழ்களைப் பெறுவதற்கு பல்வேறு தகவல்கள் கோரப்பட்டிருந்தது. அதனை முழுமையாகப் பதிவு செய்த பிறகு, சுமார் 5 பக்கங்கள் உள்ள பதிவுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யும் நிலை இருந்தது. அவ்வாறு அதிக தகவல்கள் கோராமல் குறைந்த தகவல்களுடன் ஒரு பக்க பதிவுச் சான்றிதழைப் பெறும் வகையில் உத்யோக் ஆதார் எண் என்ற பதிவை பெறும் நடைமுறையை மத்திய அரசு

18-09-2015 அன்று அறிவித்தது. அந்த அறிவிப்புக்கு பிறகு EM PART - I, EM PART - II  ஆகிய பதிவு சான்றுகள் பெறும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையில் சான்று பெறும் முறை மிகவும் எளிமையானதாகவும், மிகவும் குறைந்த தகவல்களை பதிவு செய்து ஒரு பக்க சான்று பெறும்வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த உத்யோக் ஆதார் எண்ணைப் பெற வேண்டிய அவசியமில்லை. புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் இந்த ஒரு பக்க உத்யோக் ஆதார் எண் சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆனால் ஏற்கெனவே பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் விரும்பினால் இந்த உத்யோக் ஆதார் எண்ணைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

உத்யோக் ஆதார் எண்ணைப் பெற ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் போது அதில் தொழில் முனைவோரின் ஆதார் எண், ஆதார் அட்டையில் குறிப்பிட்டவாறு பெயர், முகவரி, தொழில் நிறுவனத்தின் பெயர், எந்த வகை நிறுவனம், வங்கிக் கணக்கு எண், முதலீடு, தொழில் துவங்கிய தேதி ஆகியவற்றை பதிவு செய்து உத்யோக் ஆதார் எண்ணைப் பெறலாம். இதனை பதிவுச் சான்றிதழாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசின் சேவைகளைப் பெற இதனை ஓர் அத்தாட்சியாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும் இந்த உத்யோக் ஆதார் எண்ணை அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் தொழில் துவங்குபவருக்கு ஆதார் எண் இருப்பது அவசியமாகின்றது. அப்போது தான் ஆன்லைன் மூலம் உத்யோக் ஆதார் எண் பெற முடியும். ஆதார் எண் இல்லாதவர்கள் இதற்காக இணைய தளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையத்திற்கு அனுப்பி பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உத்யோக் ஆதார் எண் பெற http:udyogaadhaar.gov.inUAUdyogAadhar-New.aspx இணைய தளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT