சுருக்கெழுத்து படியுங்கள்!
என்னதான் கணினிமயம் என்றாலும் மத்திய அரசைப் பொறுத்தவரை சுருக்கெழுத்து படித்தவர்கள இன்றும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்து ஓய்வு பெற்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள் நம்மிடம் கூறியதிலிருந்து:
என்னதான் கணினிமயம் என்றாலும் மத்திய அரசைப் பொறுத்தவரை சுருக்கெழுத்து படித்தவர்கள இன்றும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்து ஓய்வு பெற்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள் நம்மிடம் கூறியதிலிருந்து:
""மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக (Personal Assistant) சுருக்கெழுத்துப் படித்தவர்கள் ஆண்டுதோறும் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்துவிட்டு உயர்நிலைத் தட்டச்சும், இளநிலை சுருக்கெழுத்தும் (Short Hand Lower) படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசிலும், அதைச் சார்ந்த பல்துறை நிறுவனங்களிலும் வேலைகள் காத்திருக்கின்றன. இதோடு பட்டப் படிப்பும் படித்திருந்தால் மிக எளிதாக வேலை கிடைக்கும்.
பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் பிரிவு-4 (எழ்ர்ன்ல் ஈ) மற்றும் பிரிவு-3 (Group C) ஆகிய நிலைகளில் உள்ள பணிகளுக்கு சுருக்கெழுத்துத் தேர்வுகள் நடத்துகிறார்கள். பிரிவு 4 என்பது தமிழக வருவாய்த்துறையிலுள்ள, வருவாய் ஆய்வாளர் நிலைக்குச் சமமானது. பிரிவு-3 என்பது வட்டாட்சியர் பதவிக்கு இணையானது. கடந்த சில ஆண்டுகளாக நநஇ தேர்வின் மூலம் தேவைப்படும் எண்ணிக்கையில் சுருக்கெழுத்தாளர்கள் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
2013ஆம் ஆண்டு நநஇ நடத்திய Group D, Group C தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப போதிய நபர்கள் கிடைக்காததால் பல நூறு இடங்கள் காலியாகவே இருந்தன.
Group D (80 words per minute): எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 24,188 நபர்களில் 8,753 பேர் மட்டுமே குறுக்கெழுத்துத் தேர்வில் (Short Hand Skill Test) கலந்து கொண்டார்கள்.
Group C (நிமிடத்துக்கு 100 அல்லது 120 சொற்கள்): எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,496 பேர்களில் 6,96 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
மிகக் குறைந்த போட்டியே உள்ள இத்தேர்வில் மாணவர்கள் கலந்து கொண்டால் தாசில்தார் Rank (Group C). அல்லது R.I. Rank (Group D) பணிகள் உடனடியாகக் கிடைக்கும். 2013இல் நடந்த தேர்வில் Group இல் 106 இடங்களுக்கு 22 பேர் மட்டுமே தகுதி பெற்றார்கள். Group D இல் 1,486 இடங்களுக்கு 1,131 பேர் மட்டுமே தகுதி பெற்றார்கள் என்பது வருத்தப்படக் கூடிய விஷயம்.
எனவே, நிரந்தரமாக மத்திய அரசில் வேலை வேண்டுமென்றால் உயர்நிலை சுருக்கெழுத்தினைக் கற்றால் போதும். ஆங்கிலச் சுருக்கெழுத்தின் வேகம் நிமிடத்திற்கு 160 சொற்கள் இருந்தால் பாராளுமன்ற செய்தியாளர்களாக கூட (Parlimentary Reporter) நீங்கள் ஆகலாம். ஓரு மாவட்ட ஆட்சியாளரின் ஊதியத்துக்கு இணையான ஊதியத்தைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இந்தியா முழுமைக்கும் இலட்சக் கணக்கான இளைஞர்கள் பட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாலும் வேலைகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதைத் தவிர்க்க சுருக்கெழுத்து திறனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை நம் வசப்படும்'' என்றார்.