முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! கண்டுபிடியுங்கள் ஆதார நூல்களை!

முதல்நிலைத் தேர்வுக்காக பாடங்களைப் படிக்கும்போது வினாக்கள் அமைவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் பற்றி கடந்த பகுதிகளில் பார்த்தோம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

முதல்நிலைத் தேர்வுக்காக பாடங்களைப் படிக்கும்போது வினாக்கள் அமைவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் பற்றி கடந்த பகுதிகளில் பார்த்தோம். அதில் கடினமான பகுதிகளைத் தவிர்த்துவிடாமல் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து புரிந்து கொள்ளவும், நினைவில் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும் என்று கூறினோம்.

இப்போது முதல்நிலைத் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் பற்றி குறிப்பாக, சிலவற்றைக் காணலாம். பொது அறிவுப்பாடத்தில் கொள்குறி வினாக்கள் பொதுவாக

10 -க்கும் மேற்பட்ட வகைகளில் அமைகின்றன. பெரும்பாலும் அவை FACT வினாக்கள், CORRECT PAIR,  INCORRECT PAIR வினாக்கள், ASSERTION, REASON வினாக்கள் மற்றும் வரை படங்களை மையமாகக் கொண்ட வினாக்கள் என்ற வகையில் அமைகின்றன.

CORRECT STATEMENTS வினாக்கள், INCORRECT STATEMENTS வினாக்கள், Match List I with List II  வினாக்கள், மற்றும் கால வரிசையை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் என்ற வகையிலும் அமைகின்றன.

மேலே கண்டுள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகள் முதல்நிலைத்தேர்வில் வினாக்களை அணுகுவதற்கான Key Words-ஆக விளங்குகின்றன.

தேர்வர்கள் இக்கேள்விகளில் மேற்கண்ட வார்த்தைகளை மெலிதாக அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கேள்வியையே தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

தேர்வுக்கான பாடப்பகுதிகளை படிப்பதுடன் முதல்நிலைத்தேர்வுக்கு ஏராளமான மாதிரி வினாக்களை தினந்தோறும் நேர நிர்ணயத்துடன் Solve செய்து வருவது நல்ல அணுகுமுறையாகும். குறிப்பிட்ட பாடங்களுக்கான தனித்தனியான மாதிரி வினாக்கள், ஒட்டுமொத்தப் பாடங்களின் (Comprehensive) மாதிரி வினாக்கள் என்று வரையறுத்துக் கொண்டு பயிற்சியினை மேற்கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

வினாத்தொகுப்புகளைப் பொறுத்தவரையில் இரண்டு வகைகள் உள்ளன. தேர்வாணையம் சுமார் கடந்த 10 ஆண்டுகளில் கேட்ட Original வினாக்களின் தொகுப்பு ஒருவகை. அந்தந்த ஆண்டுகளில் சில தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் மாதிரி வினாக்களின் தொகுப்பு மற்றொரு வகை.

இதில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வகை தேர்வாணையத்தின் முந்தைய தேர்வின் வினாக்களே ஆகும். அவையே உண்மைத் தன்மையையும், வினாக்களின் சரியான கட்டமைப்பு முறையையும், மாறிவரும் தேர்வு நடைமுறையையும் நமக்கு உணர்த்துவன. மேலும், தேர்வரின் பலம் மற்றும் பலவீனமான பகுதிகளை உணர்ந்து கொள்ளுவதற்கும் உதவுவன.

இரண்டாம் வகை மாதிரி வினாக்களில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், 5000 வினாக்கள் அல்லது 10000 வினாக்கள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தில் தயாரிக்கப்படுபவை. எனவே, இவை ஒரு சிறிய பயிற்சிக்கு உதவும் என்று கூறலாம். பெரும்பாலும் இவை பழைய வினாக்களின் புதிய தொகுப்பாகவே அமைந்துவிடுகின்றன.

தேர்வர்கள் குடிமைப்பணிகளின் முந்தைய தேர்வில் பாடப் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்களை படிப்பதோடு அவ்வினாவுக்கான ஆதார நூல் எதுவாக இருந்துள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். கண்டறிய வேண்டும். அவ்வாறு அறிந்து படித்தல் நாம் சரியான நூல்களையே படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும்.

எடுத்துக்காட்டாக, முந்தைய ஆண்டின் வினா ஒன்று கீழே தரப்படுகின்றது.

Consider the following Statements:

Jawaharlal Nehru was in his fourth term as the Prime Minister of India at the time of his death.

Jawaharlal Nehru represented Rae Bareilly Constituency as a Member of Parliament.

The first Non-Congress Prime Minister of India assumed the office in the year 1977.

Which of the statements given above is / are correct

(a)1 and 2 (b) 3 only   (c) 1 only(d) 1 and 3

என்று அமைந்துள்ள இவ்வினாவில் 2-வது Statement தவறானது ஆகும். ஏனெனில், ஜவஹர்லால் நேரு உத்திரப்பிரதேச மாநிலத்தின் புல்புர் (Phulpur) தொகுதியிலிருந்தே தொடர்ந்து பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

நேருஜி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் துணைத்தலைவர் (Vice President) என்ற நிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் சுதந்திரம் பெற்றபோது 1947 இல் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 1952 - பொதுத்தேர்தலின் மூலம் இரண்டாவதாகவும், 1957 பொதுத்தேர்தலின் மூலம் மூன்றாவதாகவும், 1962 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் மூலம் நான்காவது முறையாகவும் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

மேலே கண்டுள்ள வினாவுக்கான ஆதார நூலாக விளங்குவது பிபன் சந்திரா எழுதிய India Since Independence என்ற நூல் ஆகும்.

அதேபோல புவியியல் பாடத்தினை படிக்கும் போதும், நாளிதழ்களை வாசிக்கும் போதும் தேர்வர்கள், Orient Black Swan SCHOOL ATLAS  அல்லது Oxford STUDENT ATLAS for India  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை அவசியம் கைவசம் வைத்திருத்தல் வேண்டும்.

சர்வதேச நிகழ்வு, தேசிய நிகழ்வுகளை நாளிதழில் படிக்கும்போது தேர்வு நோக்கில் அவசியம் என்று அந்த நிகழ்வை நீங்கள் கருதினால், அதில் ஏதேனும் ஓர் இடம் சுட்டிக்காட்டப்பட்டால் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள இடம், அமைந்துள்ள நாடு மற்றும் கண்டம் ஆகியவற்றின் Physical  மற்றும் Political வரைபடங்களை கூர்ந்து நோக்கிட வேண்டும்.

மேலும் புவியியல் பாடத்திற்கு D.R.Khullar எழுதிய INDIA:

A Comprehensive Geography,   SAVINDRA SINGH எழுதிய hysical Geography மற்றும் NCERT ஆகிய பாட நூல்களில் தேர்வு நோக்கில் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.

உதாரணமாக, முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட ஒரு புவியியல் பாட வினா கீழே தரப்படுகின்றது.

The largest Coral reef in the world is found near the cost of which one of the following Countries

(a) Australia (b) Cuba (c) Ghana(d) Philippines

இதற்கான விடை ஆஸ்திரேலியா ஆகும். இந்த வினாவுக்கான ஆதாரப் புத்தகமாக நஹஸ்ண்ய்க்ழ்ஹ நண்ய்ஞ்ட் இன் நூல் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய பவளப் பாறையாக அறியப்பட்டுள்ள இப்பகுதி, 1981ஆம் ஆண்டு பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பவளப்பாறை சம்பந்தமாக கடந்த வாரத்தில் ஒரு செய்தியினை நீங்கள் நாளிதழ்களில் பார்த்திருக்க முடியும்.

ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், அந்நாட்டின் பவளப்பாறை பாதுகாப்பு அமைப்பினரும் இதுபற்றி கருத்துகள் தெரிவித்திருந்தனர்.

ஏனெனில், சுமார் 93 சதவிகிதம் பவள பாலிப்புகள் நிறம் வெளுத்தல் என்னும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புவி வெப்பமாதலால் கடல்நீரின் வெப்பநிலையும் உயர்ந்து மேலே கண்டுள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, இப்பகுதி மீண்டும் கவனம் பெற்றுள்ளது என்பதனை நினைவிற் கொள்ள வேண்டும். இன்னும் சில யுத்திகளை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.