வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 38
புரொபஸரும் கணேஷும் புரொபஸரின் நண்பர் பக்ஷிராஜனின் அலுவலகத்தில் இருக்கிறார்கள். புரொபஸர் கணேஷுக்கு ரிப்போர்டட் ஸ்பீச் (Reported speech) பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார்.
கணேஷ்: சார் நீங்க சொன்னதில வந்து....
அப்போது பக்ஷிராஜனின் செல்போன் ஒலிக்கிறது. ரிங் டோன் "வாடா மாப்பிள்ளே' பாடல். அவர் போனை எடுத்தபடி வெளியே போய் பேசுகிறார்.
கணேஷ்: சார் இதில தான் எனக்கு ஒரு டவுட்.
புரொபஸர்: வாடா மாப்பிள்ளே பாட்டிலா?
கணேஷ்: ஆமா சார். அதில வடிவேலு விஜய், நயன்தாராவைப் பார்த்து I will bomb youன்னு கத்துவார்.
புரொபஸர்: எனக்கு அந்த பாட்டெல்லாம் தெரியாதுடா
அப்போது பக்ஷிராஜன் திரும்புகிறார்.
பக்ஷிராஜன்: அவன் ஒரு அம்மாஞ்சி. நான் அப்டேட்டா இருப்பேன். என் கிட்ட கேளு
கணேஷ்: சார் அந்த பாட்டிலே "ஐ பாம் யூ' என்று வடிவேலு சொல்றதை நான் ஒரு கட்டுரையில குறிப்பிடுகிறேன்னு வையுங்க.
பக்ஷிராஜன்: சரி
கணேஷ்: வடிவேலு says
பக்ஷிராஜன்: வடிவேலு criesன்னு சொல்லணும். உணர்ச்சிகரமா கூவுறது ஸ்ரீழ்ண்ங்ள். சாதாரணமாச் சொல்லுறது says. Bye the bye Vadivelu says சரியா? tells சரியா?
கணேஷ்: என்ன சார் வித்தியாசம்?
பக்ஷிராஜன்: இன்னார் கிட்ட சொல்றாரென்று வந்தால் அது tells. இன்னாரிடம் என குறிப்பாக இல்லாமல், சும்மா சொல்வதானால் says. உதாரணமா வடிவேலும் இதை விஜய், நயன்தாராவை நோக்கிச் சொல்கிறார் என்றால், Vadivelu tells Vijay and Nayanthara that... ஆனால் ஒரு தலைவர் நாம் எல்லோரும் பெற்றோரை மதிக்க வேண்டும், அப்போது தான் இந்தியா வல்லரசாகும் என்று சொன்னால்?
கணேஷ்: பெற்றோரை மதித்தால் எப்படி சார் நாடு வல்லரசாகும்?
பக்ஷிராஜன்: அதெல்லாம் கேட்கக் கூடாது. சொன்னா கேட்டுக்கணும். இப்போ ஒரு தலைவர் அப்படி எல்லா மக்களுக்கும் சொல்றாரு. இன்னாரிடம் என்று குறிப்பாகச் சொல்லவில்லை. அதனால் The Leader says that என்று சொல்லலாம்.
சரி let us come back to that song. அதில cries ஐ வச்சுக்கலாம்.
கணேஷ்: ஒகே சார். Vadivelu cries I will bomb you. இதுவே ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில் Vadivelu cries that he will bomb him சரியா?
பக்ஷிராஜன்: இல்லே. அவர் ரெண்டு பேரையும் நோக்கி சொல்றதால him
இல்ல them
கணேஷ்: Vadivelu cries that he will bomb them சரியா?
புரொபஸர்: will ஐ would என்று மாத்தணும். மத்தபடி எல்லாம் சரி. Vadivelu cries that he would bomb them. இதே மாதிரி shall வந்தால் should. May
வந்தால் Might. Can வந்தால் Could.
கணேஷ்: என்ன சார் வித்தியாசம்?
புரொபஸர்: will, shall, can, may இதெல்லாம் எதிர்காலத்தை குறிப்பதற்கான வினைச்சொற்கள். இவற்றுக்கு ஒரு கடந்த காலம் இருக்கிறது. அது தான் would, should, could, might.
கணேஷ்: அதெப்படி சார் எதிர்காலத்துக்கு கடந்த காலம் இருக்க முடியும்?
புரொபஸர்: கடந்த காலத்தில் எனக்கு எதிர்காலமாய் இருக்கிற ஒன்று நிகழ்காலத்தில் கடந்த காலம் தானே? உதாரணமா, என் மனைவியை முப்பது வருசத்துக்கு முன்னால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஸ்வாமி முன்னால் அவள் கண்ணை மூடி நெக்குருதி திருப்பாவை பாடி நிற்கிறதைப் பார்த்தபோது, கல்யாணம் பண்ணிக்கிட்டா இவளைத் தான்னு தோணிச்சு. அப்போ future tense-இல் யோசிச்சேன். கல்யாணத்துக்கு பின்னாடி அந்த யோசனை past tense ஆயிடுச்சு. இப்போ அதைச் சொல்லும்
போது past tense இல் தானே சொல்லி ஆகணும்? I thought then that if I marry it should be this girl.
பக்ஷிராஜன்: இங்க தான் நான் ஆரம்பத்தில் சொன்ன நிருபரோட தப்பு வருது. If I marriedன்னு வரணும்.
கணேஷ்: அதெப்படி சார்?
புரொபஸர்: அது conditional clause. உனக்குப் பொறுமையா விளக்குறேன்.
(இனியும் பேசுவோம்)