வாங்க இங்கிலீஷ் பேசலாம்
சார் உங்களுக்கு மீன் பற்றி இவ்வளவு விவரங்கள் தெரியுதே? புரொபஸர்: பார்த்தா மூக்கை பொத்திப்பேன்.
Captain Flint எனும் கிளி கணேஷுக்கு சில ஆங்கிலச் சொற்களை விளக்கிக் கொண்டிருக்கிறது. அப்போது அது Fish என்பதன் பன்மைச் சொல் (plural) என்னவென வினவுகிறது.
கணேஷ்: Fishd பன்மை fishes.
Captain Flint: இல்ல தப்பு fish.
கணேஷ்: Be?
Captain Flint: ஆமா ஆங்கிலத்தில் சில சொற்களுக்கு ஒருமையும் பன்மையும் ஒரே சொல் தான்.
Fish அப்படியான ஒன்று, ஐ I caught many fish at the river. நான் ஆற்றில் நிறைய மீன்கள் பிடித்தேன்.
கணேஷ்: நீ மீன் சாப்பிடுவியா Flint?
Captain Flint: ச்சே... நான் வெஜிடேரியன்.
புரொபஸர்: ரெண்டு விசயங்கள்.
1) Fishes என்றும் சொல்லலாம். அதாவது பல வகையான மீன்களைக் குறிப்பிடும் போது. ஒரு குளத்தில் பல வகையான மீன்களைப் பிடிக்கிறாய் என்றால் you caught many fishes. ஆனால் ஒரே வகையான மீனை மட்டும் பிடித்தாய் என்றால், உதாரணமாய், நெத்திலி மீன்களை மட்டும் பிடித்தாய் என்றால், you caught many neththili fish.
கணேஷ்: சார் உங்களுக்கு மீன் பற்றி இவ்வளவு விவரங்கள் தெரியுதே? புரொபஸர்: பார்த்தா மூக்கை பொத்திப்பேன். ஆனால் என்ன ஏதுன்னு
தெரிஞ்சு வச்சுக்கணுமே? உன்னை மாதிரி மாண வர்களை வேறெப்படி handle பண்றது? சரி, ரெண்டாவது விசயம் parrots are non-vegetarian too. என் பிரண்ட் ஒரு African Grey கிளி வச்சிருக்கான். அது சிக்கன் ஒரு முழுகாலையே முழுங்கும்.
Captain Flint: நானும் மிஸ்டர் நேரு ஆட்சி பண்ற வரையில் non-vegetarian தான்.
ஆனால், இப்போதுள்ள நாட்டு நிலைமையில் it is not politically correct to be a non-vegetarian.
புரொபஸர்: அந்த பயன்பாடு தப்பு.
கணேஷ்: ஏன் சார்?
புரொபஸர்: political correctness என்றால் சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரை புண்படுத்தாத விதத்தில் கவனமாய் சொற்களைப் பயன்படுத்துவது. Deaf என சொல்வது politically incorrect. Auditorily impaired என்பது politically correct. ஆனால் அரசைக் கண்டு அஞ்சுவது political correctness அல்ல.
Captain Flint: அப்படியென்றால் நான் தேவையில்லாமல் பயப்படுகிறேனா?
புரொபஸர்: அப்படிச் சொல்லலை. ஆனால் உன் பயத்துக்கு politicophobia என ஒரு வார்த்தை இருக்கிறது. அரசாங்க விதிமுறைகள், அலுவலகங்கள், நடைமுறைகளைக் கண்டு பீதி கொள்வது. politicophobia: எனக்கு விதிமுறைகளைக் கண்டு அச்சமில்லை. பரவி வரும் வெறுப்புணர்வு பற்றித்தான்...
புரொபஸர்: அதற்குப் பெயர் தான் anti-government Phobia.
கணேஷ்: அதென்ன சார் ?
புரொபஸர்: அரசாங்கம் நமக்கு எதிராய் சதி செய்வதாய் கற்பனை செய்து அஞ்சுவது.
Captain Flint கீச்சிடுகிறது: யார் கற்பனை செய்கிறார்கள்? ஆங்?
புரொபஸர் (பயந்து போய்): நான் போய் இன்னொரு ஜூஸ் வாங்கி வருகிறேன். (அவர் போகிறார்.)
கணேஷ்: அவர் கிடக்கட்டும். சற்று முன் புரொபஸர் உன் கிட்ட don't make me a scapegoat என்று சொன்னாரே...
Captain Flint: ஆமா
கணேஷ்: Goat என்றால் ஆடு. நான் Scapegoat என்றால் என்ன? என்று கேட்ட போது அவர் பலிகடா என்றார்.
Captain Flint: சரி பலி ஆடுன்னு வச்சுக்கோ
கணேஷ்: அதில்ல. அதென்ன scape? பலி என்றால் sacrifice தானே? sacrifical goat என்று தானே வர வேண்டும்?
Captain Flint: நல்ல கேள்வி. Scapegoat என்ற சொல் விவிலியத்தில் இருந்து வருகிறது.
1530-இல் வில்லியம் டிண்டேல் எனும் எழுத்தாளர் விவிலியத்தை ஹீப்ரூ மொழியில் இருந்து மொழிபெயர்த்தார்.
பழங்காலத்தில் யூத மக்கள் Day of Atonement எனப்படும் பிராயச்சித்த நாள் அன்று இறைவனுக்கு இரண்டு ஆடுகளை நேர்ந்து விடுவார்கள். சீட்டு எழுதி குலுக்கிப் போடுவார்கள். ஒரு எண் வருகிற ஆட்டை வெட்டி பலி கொடுப்பார்கள்.
இன்னொரு எண் கொண்ட ஆட்டை வெட்டவெளியில் திறந்து விடுவார்கள். மக்களின் பாவங்களைச் சுமந்து அந்த ஆடு ஊரை விட்டு போய் விடும். இந்த ஆட்டைத் தான் Azazel என்றார்கள். டிண்டேல் இந்த Azazel என்பதை தவறாக ezozel என மொழிபெயர்த்தார். அதாவது "கிளம்பிச் செல்லும் ஆடு' எனும் பொருளில் அதை மாற்றி எழுதினார்.
இது பின்னர் scape goat என்று மாறியது.
(இனியும் பேசுவோம்)