இளைஞர்மணி

பார்வையில்லாதவர்கள் டி.வி. நிகழ்ச்சிகளை அறிய புதிய கருவி! 

DIN

உலக அழகை கற்பனையிலேயே கண்டு வரும் பார்வையற்றவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விஞ்ஞான வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் பயன்பட்டால் அது முழுமை  பெறும்.

பொதுவாக டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்வையற்றவர்களும், காதுகேளாதவர்களும் காணவோ, கேட்கவோ முடியாது. அருகில் உள்ளவர்களிடம் அவர்கள் கேட்டு அறிந்து கொள்வார்கள்.

அவர்களுக்கு நடந்ததை நொடிக்கு நொடி  கூற இன்றைய சூழலில் யாருக்கும் பொறுமை கிடையாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பார்வையற்றவர்களும், காதுகேளாதவர்களும் டி.வி. நிகழ்ச்சிகளை நேரடியாக அறிந்து கொள்ள "பெர்வாசிவ் எஸ்யுபி' (Pervasive SUB) என்ற புதிய கருவியை ஸ்பெயின் நாட்டில் உள்ள யூனிவர்சிடாட் கார்லோஸ் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்வையற்றவர்கள், காதுகேளாதோர் தொட்டு அறிந்துகொள்ளும் பிரெய்ல் எழுத்துகள் இந்த கருவியில் இடம் பெற்றுள்ளன. டி.வி.யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் கீழ் போடப்படும் பேச்சுகளின் குறிப்பை (சப் டைட்டில்) இந்த கருவி உள்வாங்கி ஸ்மார்ட் போனில் உள்ள "கோஆல்' ஆப்பிற்கு அனுப்பி வைக்கும், பின்பு அங்கிருந்து இந்த கருவியில் உள்ள பிரெய்ல் எழுத்துகளில் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் காட்சிகளில் காண்பிக்கப்படும் சப் டைட்டிலுக்கு ஏற்ப நேரடியாக பிரெய்ல் எழுத்துகளும் உடனடியாக மாறுவதால், பார்வைத்திறனில்லாத  மாற்றுத்திறனாளிகள் டி.வி.யில் வருவதை உடனடியாகப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிரெய்ல் எழுத்துகளின் வேகத்தையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதியும் இந்த புதிய கருவியில் உள்ளது.

இந்தக் கருவியை ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சோதனைச் செய்து உபயோகமாக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், ஸ்பெயின் தலைநகர் மேட்ரீட்டில் உள்ள தேசிய தொலைக்காட்சிகளில் இந்த புதிய கருவியைப் பயன்படுத்தும் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இது விரைவில் அந்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT