வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 113
ரொபஸர், மீனாட்சி, கணேஷ், Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் இருந்து அரட்டை அடிக்கிறார்கள். Captain Flint பத்திரிகைகளின் ஸ்டேண்டில் இருந்து ஒரு மாத இதழை வாயில் கவ்வி எடுத்து வந்து புரட்டுகிறது.
ரொபஸர், மீனாட்சி, கணேஷ், Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் இருந்து அரட்டை அடிக்கிறார்கள். Captain Flint பத்திரிகைகளின் ஸ்டேண்டில் இருந்து ஒரு மாத இதழை வாயில் கவ்வி எடுத்து வந்து புரட்டுகிறது.
Captain Flint: அப்பப்ப்பா... ஒரே மாசத்தில் எவ்வளவு பிரச்னைகள் நம் மக்களை வாட்டுகிறது.
மீனாட்சி: என்ன படிக்கிறே? விகடனா?
Captain Flint: சேச்சே... நான் அந்த மாதிரி படிக்கிற ரசனை கொண்டவளா? இது ஒரு இலக்கிய பத்திரிகை. இது பேரு உ...உ...ரி...
மீனாட்சி: பேரே சரியா வாயில நுழையல. நீ எங்க ரசனையைத் திட்டறே. You are such a literary snob.
கணேஷ்: அதென்ன literary
snob?
மீனாட்சி: இலக்கிய நூல்களை ஒரு பந்தாவுக்காக மட்டும் படிப்பவர்; ஒரு புத்தகம் பிரபலம் ஆனாலே அதனை ஒதுக்கி வைப்பவர்; ஒரு புத்தகம் ஜாலியாக இருந்தால் அது மட்டமான ரசனை கொண்டது என நினைப்பவர்; புரியாமல் இருப்பதே ஒரு புத்தகத்தின் சிறப்பு என நினைப்பவர். இப்படியானவர் தான் ஒரு literary snob.
Captain Flint: Oh my od! Thanks! நான் நல்லவேளை literary snob இல்ல.
மீனாட்சி: ஏன்?
Captain Flint: இந்த பத்திரிகையில் புளூ வேல் பத்தி ஒரு கட்டுரை இருக்குது. படித்தால் புரியுது. ஐயோ அப்படீன்னா இது இலக்கிய பத்திரிகை இல்லையா?
மீனாட்சி: பார்த்தியா you prove to be a snob. சரி போகட்டும், யார் எழுதினது?
Captain Flint: ஷான் கருப்பசாமி என்பவர் எழுதியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பு: செத்து விளையாடும் குழந்தைகள்
மீனாட்சி: ம்ம்ம்...
Captain Flint: ஆனா ஒண்ணு... தலைப்பே தப்பா இருக்கே?
மீனாட்சி: என்ன தப்பு?
Captain Flint: செத்து விளையாடும் குழந்தைகள்னு இருக்கு
மீனாட்சி: ஆமா
Captain Flint: செத்த பிறகு எப்படி விளையாட முடியும்?
மீனாட்சி: எனக்கு சரியா புரியுதே? உனக்கு ஏன் குழம்புது...
Captain Flint: அப்படி இல்ல. விளையாடி சாகும் குழந்தைகள்னு இருக்கணும். அப்போ குழப்பமே இராது.
மீனாட்சி: சரி தான். ஆனால் அதோட அர்த்தம் அப்போது விளையாட்டின் போது சாகும் குழந்தைகள்னு ஆயிடுமே. இதோட பொருளே சாவை நோக்கிய விளையாட்டு என்பதல்லவா?
Captain Flint: ம்ஹும்... இது சரி வராது போலிருக்கே. என்ன தான் சொல்ல வரீங்க?
மீனாட்சி: ஒரிஜினல் தலைப்பே சரியா வருது.
Captain Flint: ஆனால் "செத்து' என சாவு முதலில் வரது எனக்கு அபத்தமா படுதே...
மீனாட்சி: இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு தான். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
Captain Flint: எப்படி?
மீனாட்சி: Children Who Play Dying.
Captain Flint : இல்லீங்க Children Who Die Playing என்று இருக்கணும்.
மீனாட்சி: திரும்பவும் தப்பு பண்றே. விளையாட்டின் போது சாகவில்லை. சாவே இவ்விளையாட்டின் இலக்கு. அதனால் உன் தலைப்பு தப்பு.
Captain Flint : எனக்கு புரியல
மீனாட்சி: விளக்குறேன் கேளு. Children Who Play Dying என்பதை Children Who Play by Dying என விரிக்கலாம். Children Who Die Playing என்பதை Children Who Die by Playing என விரித்தெடுக்கலாம்.
Captain Flint : சரி
மீனாட்சி: இங்கே by dying அல்லது by playing என்பது adjunct.
Captain Flint : Adjunct என்றால்?
மீனாட்சி: ஒரு சொல் அல்லது சொற் தொகுப்பு. அது ஒரு வாக்கியத்தில் ஒரு கூடுதல் தகவலைத் தரும் வண்ணம் தரப்பட்டிருக்கும். ஆனால் அத்தகவல் அத்தியாவசியம் அல்ல. He spoke by holding a mike என்பதில் by holding a mike என்பது adjunct. அது அவன் எப்படி பேசினான் எனும் கூடுதல் தகவலைத் தருகிறது. ஆனால் அவன் பேசினான் என்று வெறுமனே சொன்னாலும் அவ்வாக்கியம் நிறைவு பெறும். He spoke. ஒகே?
Captain Flint : ஒகே
மீனாட்சி: அதனால் by holding இங்கே ஒரு adjunct. அதே போல by playing / by dying கூட adjunct.
Captain Flint : சரி
மீனாட்சி: இப்போது தமிழ் வாக்கியத்துக்கு வருவோம். அவர்கள் விளையாடினார்கள், செத்து. இங்கு "செத்து' என்பது எப்படி விளையாடினார்கள் என்பதற்கான கூடுதல் தகவல். அதாவது ஹக்த்ன்ய்ஸ்ரீற்.
(இனியும் பேசுவோம்)