முகப்பு
இளைஞர்மணி

ஆன்லைன்... வருவாய்க்கு வழி!

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின்  எண்ணிக்கை மிகவும் குறைவு. உட்கார்ந்த இடத்திலிருந்தே உலக நடப்பை அறிய முடியும்.  அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.

Updated On : 14 நவம்பர், 2017 at 2:18 PM
பகிர்:

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின்  எண்ணிக்கை மிகவும் குறைவு. உட்கார்ந்த இடத்திலிருந்தே உலக நடப்பை அறிய முடியும்.  அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.  அந்த அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அந்த தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்தே   ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் உள்ளன.  ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லட்  ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம்.  அதற்கு  இணையதள வசதி அவசியம்.

ஆன்லைன் விளம்பரங்களை பார்வையிடுதல் : ஆன்லைன் விளம்பரங்களை பார்ப்பதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்.  விளம்பரங்கள் தான் வணிகத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  அதனால் பல நிறுவனங்கள் விளம்பரங்களைப் பார்ப்பதற்கு பணம் வழங்குகிறது.  அதற்காக ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு அந்த நிறுவனங்களிடமிருந்து ஆன்லைன் கணக்குகளைப்  பெற்று அதில் உள்ளீடு செய்து விளம்பரங்களைப் பார்வையிடலாம்.  பணம் சம்பாதிக்கலாம்.

Advertisement

ஆன்லைன் சர்வே : பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய சேவையையும், பொருட்களையும் நுகர்வோரிடம் சென்று சேர்க்கவும், மேலும்  தங்களுடைய சேவை, பொருட்களைப் பற்றிய நுகர்வோரிடன் கருத்துக்களை  அறியவும் விரும்புகின்றன.  தங்களுடைய பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதே அவற்றின் நோக்கம்.  அவை ஆன்லைனில் சர்வே நடத்தும்.   நிறுவனங்களின் கேள்விகளுக்கு ஆன்லைனில்  பதில் அளிப்பதற்கு அந்த நிறுவனங்கள் பணம் வழங்குகின்றன.   பதில் அளிக்கலாம். பணம் சம்பாதிக்கலாம்.

ஃப்ரீலான்சிங் ஜாப்ஸ் (Freelancing Jobs) : ஆன்லைனில் எழுதுதல், பாடுதல், இணைய தளங்களை உருவாக்குதல், ஆலோசனை கூறுதல், வீடியோக்களை உருவாக்குதல், புகைப்படங்களைப் பதிவிடுதல் போன்ற ஃப்ரீலான்சிங் வேலைகளுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் பணம் வழங்குகின்றன.

டேட்டா என்ட்ரி : வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு  பதிவு செய்து  கொடுப்பது டேட்டா என்ட்ரி எனப்படுகிறது.  இந்தப் பணியைச் செய்ய ஒவ்வொரு நிறுவனமும் உலகமெங்கும்  பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.  ஒவ்வொரு ஊரிலும் டேட்டா என்ட்ரி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சேர்ந்து பணி செய்யலாம். பணம் சம்பாதிக்கலாம்.

ஆன்லைனில் புகைப்படம் விற்பனை :  வித்தியாசமான புகைப்படங்கள், இயற்கை காட்சிகள், அதிசயமான புகைப்படங்களை பிடித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதன் மூலமும் வருவாய் ஈட்டலாம். இதுபோன்று பல விதமான ஆன்லைன் வேலைகள் காத்திருக்கின்றன. 

இதுபோன்று ஆன்லைன் மூலம் சம்பாதிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய விதிமுறைகளை நன்றாகப் படித்து பார்த்து அதனை ஏற்றுக் கொண்ட பிறகு, குறிப்பிட்ட  இணைய தளத்திற்குள் செல்ல உள்ளீட்டு முகவரியும், ரகசிய குறியீடும் வழங்குவார்கள்.  அதனைப் பெற்று அவர்கள் குறிப்பிடும் வேலையைச்  செய்து கொடுத்து  வருவாய் ஈட்டலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.