முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 218

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:18 PM
பகிர்:

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் வரும் பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அவர்கள் பல இந்திய ஆங்கில தவறுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். 
நடாஷா (புரொபஸரிடம்): சார் இந்த by the by என்பது ஓர் இந்தியனிசம் தானா?
கார்த்திக்: ஓ... என்னை போட்டுக் கொடுக்க பார்க்கிறியா? நான் சற்று முன்னால் அதை சரியாத் தானே பயன்படுத்தினேன். 
நடாஷா: சேச்சே...
புரொபஸர்: By the by என்றால் "அதிருக்கட்டும்" என தமிழில் சொல்கிறோமே... அதோட ஆங்கில மாற்றுச் சொல்லாடல். இதைச் சொல்லும் போதே எனக்கு வேறொண்ணு நினைவுக்கு வருது. அது இதோட நேரடியாகத் தொடர்பு இல்லாத ஆனால் சொல்ல வேண்டிய ஒண்ணாக அது இருக்கலாம். By the by I have a friend who always confuses  by the by  with  by and by எனச் சொல்லும் போது நான் வேறொரு விசயத்தைப் பற்றி - இந்த இரண்டு பிரயோகங்களையும் எப்போதுமே குழப்பிக் கொள்ளுகிற ஒரு நண்பரைப் பற்றி - பேச்சை எடுப்பதற்கு பீடிகை போடுகிறேன். அதுக்கு by the by என்பதைப் பயன்படுத்துகிறேன். இந்த  by என்பது அதன் அடிப்படையில் "அருகில்' என பொருள் கொண்டது. I was standing by the door என்றால் நான் கதவருகே நின்று கொண்டிருந்தேன் எனப் பொருள். கடவுள் மீது ஆணையிட்டு என்பதை I swear by God என சொல்லுவார்களே அதுவும் கடவுள் அருகில் நின்று நாம் ஆணையிடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் எனும் கற்பனையில் நாம் பயன்படுத்துவது. By the bye என்பதிலும் நான் சொல்லிக் கொண்டிருக்கிற விசயத்துக்கு அருகில் வருகிற, ஆனால் நேரடியாக தொடர்பில்லாத மற்றொன்று இது எனும் பொருள் வருகிறது. 
கார்த்திக்: அதென்ன சார் க்ஷஹ் by and by? நான் இது வரை கேட்டதே இல்லையே. அதுக்கும் இதே மீனிங்கா இல்ல... வேறு அர்த்தமா? 
புரொபஸர்: You are right?  by and by என்பதைக் கேட்டிருக்க அதிக வாய்ப்பில்லை. இது ஒரு பழைய பிரயோகம். பதினாறாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலும் விவிலியத்திலும் பிரசித்தமாக புழங்கின பிரயோகம் அது. அதனாலே இப்போது யாராவது by and by என்று சொன்னால் அதுக்கு ஒரு விவிலிய தொனி கிடைத்து விடுகிறது. 
நடாஷா: What does that meaning?
புரொபஸர்: By and by GuTÕ JÚ adverbial phrase. அதாவது இது காலத்தைக் குறிக்கிற ஒரு பிரயோகம். இன்னும் சற்று நேரத்தில், எதிர்காலத்தில் எனும் பொருளில் இதைப் பயன்படுத்துவாங்க. நீங்க கவர்னரைப் பார்க்கிறதுக்காக போறீங்க. அவர் வயசான மனிதர். உங்களுக்கு குறிக்கப்பட்ட நேரம் பத்து மணி என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் கவர்னருக்கு காலையில் எழுந்ததும் மூட்டு வலி ஏற்படும் என வைத்துக் கொள்வோம். அவருக்கு உடம்பு சீராவதற்கு சில நாட்கள் அதிக நேரம் எடுக்கும். அவர் எட்டு மணிக்கு எழுந்தால் கூட சிலநாட்களில் இரண்டு மூன்று மணிநேரங்கள் படுக்கையிலே ஓய்வெடுக்க தேவை இருக்கும். அன்றும் அப்படித் தான். அதனால் தான் உதவியாளர் உங்களிடம் சொல்கிறார், His honor governor ji is still resting. If you can wait for some more time he will come by and by.  
சேஷாச்சலம்: So his honor does not honor his appointment. 
புரொபஸர்: ஹா... ஹா... (கணேஷ்) உனக்கு ஜோக் புரியுதா?
கணேஷ்: இல்ல சார்.
நடாஷா: நான் சொல்றேன். இது ஒரு கிரேஸி மோகன் டைப் ஜோக் தான். Honor என்பதை ஒரு ஏற்பாடு செய்த சந்திப்பை / ஏற்பாட்டை நாம மதிச்சு அங்கே சரியான நேரத்துக்குப் போய் எதிர்பார்த்தது போல நடந்து கொண்டோம் என சொல்லுவாங்க. The minister honored his  promise of setting up a medical college in his constitiutency. 
கணேஷ்: அதாவது ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுவது. Ok I got the joke.
சேஷாச்சலம்: இந்த by and by என்பதன் பின்னால் வேறொரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.