வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 212
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் வரும் பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் ஐய்க்ண்ஹய்ண்ள்ம் பற்றி பேச்சு திரும்புகிறது. அவர்கள் பல இந்திய ஆங்கில தவறுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். வேறு என்னவெல்லாம் தவறுகளை இந்திய ஆங்கிலத்தில் நாம் இயல்பாக்கிக் கொண்டுள்ளோம் என பார்ப்போமா!
நடாஷா: என் நண்பர் ஒருத்தர் பதிப்பகத் துறையில் வேலை பார்த்தார். ஒருநாள் அவசரமாக விடுமுறைக்கு விண்ணப்பித்த போது நான் இந்த நாளில் இன்ன வேலைக்காக செல்கிறேன், அன்று அலுவலகம் வர முடியாது என சொல்லி விட்டு so kindly do the needful என எழுதி அனுப்பினார். லீவ் முடிந்து வேலைக்குத் திரும்பியதும் மேலாளர் அழைத்து செம டோஸ். எப்படி நீ “do the needful” என்று எழுதலாம் அப்படி இப்பிடின்னு...
கணேஷ்: ஏங்க?
நடாஷா: சொல்றேன். முதலில் என் நண்பர் தன்னோட ஆங்கிலத்தில் தான் தவறுன்னு நினைத்தார். ஆனால் மேலாளர் இந்த சொற்றொடரை ஏதோ அவமரியாதையாக நினைத்து விட்டார். Do the needful என்றால் கட்டளையிடுவது, ஒரு கீழதிகாரி தனக்கு எப்படி அவ்வாறு எழுதலாம் என கொதித்துப் போய் விட்டார். என் நண்பரும் அதன் பிறகு அந்த சொற்றொடரை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. (புரொபஸரிடம்) அது தப்பாங்க?
புரொபஸர்: இல்லம்மா. அதில் அவமரியாதையாக ஒன்றுமில்லை. செய்ய வேண்டியதைத் செய்யுங்கள்” என இதற்கு அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அது ரொம்ப மரியாதையான வாக்கியமும் இல்லை தான். இன்னொரு விசயம்...
நடாஷா: என்ன சார்?
புரொபஸர்: இதுவும் ஓர் இந்தியனிசம். இந்தியர்கள் மட்டுமே அலுவலகப் பரிவர்த்தனைகளுக்காக தப்பாக இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். வெள்ளைக்காரர்கள் படித்தால் அவர்களுக்கு நாம் என்ன சொல்கிறோம் என்பதே விளங்காது. அவர்கள் இதற்குப் பதிலாக please do what is necessary என எழுதுவார்கள்.
நடாஷா: மற்றொரு சந்தேகம்.
புரொபஸர்: கேளு.
நடாஷா: போன மாதம் நான் ஒரு பப்புக்கு போயிருந்தேன்.
கணேஷ்: நீ பப்புக்கு எல்லாம் போவியா?
நடாஷா: ஏன் பப்புக்கு போனால் கெட்ட பொண்ணுன்னு நினைக்கிறியா?
கணேஷ்: சே...ச்சே... ஆச்சரியத்தில் கேட்டேன்.
நடாஷா: நான் ஒரு நவீனப் பெண். சுதந்திரமான பிரஜை.
கணேஷ்: இல்லம்மா... நீ எங்க வேணும்னாலும் போ. எனக்கென்ன? நான் ஒரு பழம் பஞ்சாங்கமுன்னு நினைச்சுக்கோ.
புரொபஸர்: கணேஷ் ஷட் அப்.
(நடாஷாவிடம்) நீ சொல்லும்மா.
நடாஷா: ஓ.கே. போயிருந்தேனா, அங்கே a guy was knocking back Moscow Mule
கணேஷ்: ஙன்ப்ங் என்றால் கழுதை தானே?
ஜூலி: இது வேற ம்யூல். Moscow Mule is a cocktail drink.
.
கணேஷ்: உனக்கு எப்படித் தெரியும்?
ஜூலி: General knowledge.
கணேஷ்: சரி... இருக்கட்டும். Knocking
back என்றால்? Knock என்றால் முட்டுறது. இல்லே ஒருத்தரை முஷ்டியால குத்துறது. Knock outன்னு குத்துச்சண்டையில் சொல்வாங்களே?
புரொபஸர்: இல்லை இதன் பொருள் வேறு. ஒருத்தர் மதுவருந்தும் போது வேகவேகமாய் கோப்பைகளை காலி பண்ணுவதை knocking back என சொல்வார்கள். அதாவது Ganesh poured some rum into a
glass and knocked it back in two swallows.
கணேஷ்: ராவாகவா?
புரொபஸர்: எப்படியோ. உனக்கு பொருள் புரிந்ததா இல்லையா?
கணேஷ்: மறக்க முடியாத அளவுக்கு. ஆனால் சார்...
புரொபஸர்: என்ன?
கணேஷ்: அதென்ன swallows?
புரொபஸர்: முழுங்குன்னு அர்த்தம். ரெண்டு வாயில் ரம்மை காலி பண்ணி விட்டார் என வருகிறது. swallows என்றால் முழுங்குவது என்பது போக மற்றொரு பொருள்
வருகிறது தெரியுமா?
கணேஷ்: என்ன? ஜூலி உனக்குத் தெரியுமா?
ஜூலி: ஸ்வாலோவ் என்றால் குருவியைப் போன்ற ஒரு சிறிய பறவை.
புரொபஸர்: நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஓர் ஏமாற்றம் நமது முன்னேற்றத்தைத் தடுக்குமானால் that incident knocked me back after I was climbing up the social ladder or after I had grown in my career எனச் சொல்லலாம்.
சேஷாச்சலம்: சரி, நடாஷா ஏன் இந்தச் சம்பவத்தை சொல்ல வந்தாங்கன்னு கேட்போமே...
புரொபஸர்: ஆமாம்மா. நீ சொல்லு.
(இனியும் பேசுவோம்)