முகப்பு
இளைஞர்மணி

தேவைக்கேற்ற மாற்றம்!

கரோனா தொற்றால் உலகமே முடங்கிக் கிடக்கிறது.   இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சகோதரர்கள் கோவிட் பொது முடக்க காலத்தில் எந்த வகையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால் வெற்றி சாத்தியமாகும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

கரோனா தொற்றால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சகோதரர்கள் கோவிட் பொது முடக்க காலத்தில் எந்த வகையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால் வெற்றி சாத்தியமாகும் என திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெற்று வருகின்றனர்.

அஜய் அரோரா, சஞ்சய் அரோரா சகோதரர்கள் தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர்கள். தங்கள் நிறுவன தயாரிப்புகளை 3 டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கி, வணிகத்தை ஆன்லைன் வணிகமாக மாற்றி வருமானத்தை ஈட்டத் தொடங்கியுள்ளனர் .

மும்பையைச் சேர்ந்த இந்தசகோதரர்கள் தொடக்க காலத்தில் பெண்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையே உலகம் முழுவதும் உள்ள தொழில் வாய்ப்புகளையும் அவர்கள் நாள்தோறும் தேடி வந்தனர். அப்போது வீட்டு அலங்காரப் பொருள்கள் பிரிவில் தேவை அதிகம் இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு சகோதரர்கள் இருவரும் சென்று வீட்டு அலங்காரப் பொருட்கள் உற்பத்தி மற்றும் புதிய டிசைன்களை உருவாக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றைத் தெரிந்து கொண்டனர்.

அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின் வீட்டு அலங்காரப் பொருட்களுக்குத் தேவையான துணிகளை சொந்தமாக உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து மும்பையில் D'Decor என்ற நிறுவனத்தைத் தொடங்கி திரைச்சீலைகள், விரிப்புகள் போன்றவற்றை ஐரோப்பிய தரத்துடன் தயாரிக்கத் தொடங்கினர்.

""தரத்தின் காரணமாக எங்களின் தயாரிப்புகளை உலகநாடுகள் தொடர்ந்து வாங்கத் தொடங்கினர். இதனால் ஐந்து தொழிற்சாலைகளை இந்தியாவின் தாராபூரில் தொடங்கினோம்'' என்கின்றனர் பெருமிதத்துடன்.
தொடக்கத்தில் இதற்கான சந்தையைப் பிடிப்பது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்திருக்கிறது அவர்களுக்கு.

""ஆரம்ப காலத்தில் உற்பத்தியாளர் குழு, வடிவமைப்பாளர் குழு, வாடிக்கையாளர் தொடர்பு போன்றவை சரியாக அமையவில்லை. இந்த நிலையில் சர்வதேச வணிகத்தில் ஈடுபடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இன்றைய சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம் அது. வர்த்தகக் கண்காட்சிகள் போன்ற வழிகள் மூலமாகத்தான் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியும் என்ற நிலை அன்று இருந்தது. இதனால் சந்தைப்படுத்துவதற்கும், நல்ல டிசைன்களை உருவாக்குவதற்கும் இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது'' என்கிறார் சஞ்சய்.

2008- ஆம் ஆண்டு உலக அளவில் பொருளாதார முடக்க நிலை ஏற்பட்டபோது நிறுவனத்தின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் D'Decor- இன் 65 சதவீத வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்காவை மையமாகக் கொண்டு நடந்து வந்தது. இதனால் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

""இதை மீட்டெடுக்க ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளில் வர்த்தகத்தை செயல்படுத்த தொடங்கினோம். அது சிறப்பான பலனைக் கொடுத்தது'' என்கிறார் அஜய்.

தற்போது இந்நிறுவனம் 1,500 கோடி ரூபாய் விற்று முதலுடன் , தினமும் 1,20,000 சதுர மீட்டர் வரை உயர்தர துணிகளை உற்பத்தி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

கிட்டத்தட்ட 65 நாடுகளுக்கு இதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. 2010-ஆம் ஆண்டு படுக்கைக்கான துணிகள், டவல், விரிப்பு போன்றவற்றைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார்கள்.

சில்லறை வணிகத்தையும் தொடங்குவதற்கு வசதியாக "சாம்பிள் புக்' வணிக மாதிரியையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். இந்த வணிக மாதிரியின்படி சில்லறை வர்த்தகர்கள் சாம்பிள் புத்தகங்களை வாடிக்கையாளர்களிடம் காட்டி ஆர்டர்கள் பெறுவார்கள்.

‘‘D’Assist என்கிற செயலியையும் நாங்கள் சில்லறை வர்த்தகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் சில்லறை வர்த்தகர்கள் ‘ஈ’ஈங்ஸ்ரீர்ழ் ஒட்டுமொத்த தயாரிப்புகளை உள்ளடக்கிய கேட்டலாக் மற்றும் மார்க்கெட்டிங் உள்ளடக்கங்களையும் புரிந்து கொண்டு ஆர்டர் செய்யலாம். தற்போது நீர் புகாத தன்மை, எளிதில் தீப்பிடிக்காத தன்மை, வைரஸ் எதிர்ப்புத் தன்மை, காற்றை தூய்மையாக்கும் தன்மை போன்றவற்றைக் கொண்டுள்ள துணிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் 250 நகரங்களில் நாங்கள் வணிகத்தை செய்து வருகிறோம்'' என்கின்றனர் அஜய், சஞ்சய் சகோதரர்கள்.

கோவிட்-19 தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட முடக்கத்தால் வணிக நடவடிக்கைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

ஆனாலும் கூட மக்கள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் பொருட்களை வாங்குவதற்கான மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் வீட்டை அழகுபடுத்துவதற்கான திட்டங்களிலும் ஈடுபட்டு வரு
கின்றனர்.
""இந்த கரோனா காலத்தில் எங்கள் தயாரிப்புகளை வாங்குவதற்கு வசதியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3 டி ஃபோட்டோ ரியாலிஸ்டிக் டிஜிட்டல் மாடல்கள் மற்றும் தயாரிப்புகளின் படங்களை இணையதளங்கள் வழியாக வாடிக்கையாளர்களின் பார்வைக்கு பதிவேற்றி வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேவையானவற்றைத் தேர்வு செய்து இணைய வழியாகவே பெற்றுக் கொள்ள முடியும்'' என்கிறார் அஜய்.

முழு கட்டுரையைப் படிக்க →