வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 256
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கணேஷிடம் ஆங்கிலத்தில் இருந்து பல கேள்விகளைக் கேட்டு சோதிக்கிறார். இதனிடையே எல்லையில் எதிரிப்படை முன்னேறி வருவதாகத் தகவல் வருகிறது. எதிரியை திக்குமுக்காடச் செய்ய வீரபரகேசரி ஒரு விநோதத் திட்டத்தை வகுக்கிறார் - வலசை வரும் எதிரி நாட்டுப் பறவைகளை கைது செய்திட ஆணையிடுகிறார். அப்போது மன்னருக்கு நற்செய்தியுடன் படைத்தளபதி ஓடி வருகிறார்.
படைத்தளபதி: மன்னாதி மன்னா, எதிரி சிக்கி விட்டான்.
வீரபரகேசரி (மகிழ்ந்து): அப்படியா! உடனே கொண்டு வா. மறக்காமல் அவனைச் சங்கிலியால் பூட்டி கொண்டு வாங்க. (தனக்குள்) எதுக்கு ரிஸ்க்கு... காலம் கெட்டுக் கெடக்கு.
சற்று நேரத்தில் படைத்தளபதி ஓர் அழகிய வண்ணப்பறவையைக் கூண்டில் வைத்து கொண்டு வருகிறார்.
படைத்தளபதி: மன்னர் மன்னா, நமது எல்லையைக் கடந்து வலசை வந்த எதிரி நாட்டு வண்ணப் பறவையை உங்கள் ஆணைப்படி கைது பண்ணியிருக்கிறோம்.
வீரபரகேசரி (பயங்கரமாக சிரிக்கிறார்): ஹா... ஹா... ஹா... சிக்கிக் கொண்டானா எதிரி! I am gonna skin him alive today.
கணேஷ்: என்ன சொல்கிறார் மன்னர்?
ஜூலி: தோலை உரிக்கப் போகிறேன் என்கிறார்.
கணேஷ்: பாவம், அதுவே ஐம்பது கிராம் தான் இருக்கும்.
ஜூலி: தோலை உரிப்பதென்றால் தோலை உரிக்கிறதுன்னு அர்த்தம் இல்லை. செமையா அடி வாங்கப் போறேன்னு அர்த்தம். அதாவது to severely punish someone.
வீரபரகேசரி (பறவையிடம்): டேய்! உன் பெயர் என்ன?
வண்ணப் பறவை: கி.. கி... கி...
வீரபரகேசரி (அதிர்ச்சியாகி): ஓ... பெண்ணா? சரி, உன் பெயர் என்ன?
வண்ணப்பறவை: டிக்டோக் ... டிக்டோக் ... டிக்டோக் ... டிக்டோக்
வீரபரகேசரி: What gall to stand in front of me claiming you are tik tok?
கணேஷ்: எஹப்ப் என்றால் ஞ்ஹப்ப் க்ஷப்ஹக்க்ங்ழ் - பித்தப்பை - தானே?
ஜூலி: அது ஓர் அர்த்தம். இன்னோர் அர்த்தம் திமிர்த்தனம், அடாவடியான துணிச்சல், மரியாதையில்லாத நடத்தை. ஆங்கிலத்தில் விளக்குவதென்றால் brazen boldness coupled with impudent assurance and insolence.
வீரபரகேசரி: கரெக்ட். What impudence, what insolennce!
வண்ணப்பறவை: இல்லை மன்னா. டிக் டாக் டிக் டாக் என்றால் எங்கள் ஊர் பாஷையில் "வணக்கம் மன்னவா' எனப் பொருள்.
வீரபரகேசரி: ஓ... அப்படியா! இருந்தாலும் இனிமேல் நீ அந்த சொற்களை உச்சரிக்கக் கூடாது என பணிக்கிறேன்.
வண்ணப்பறவை: உங்கள் கட்டளைக்கு எல்லாம் நான் பணிய முடியாது. நான் உங்கள் பிரஜையே அல்ல. மேலும்...
வீரபரகேசரி கோபத்தில் குறுக்குமறுக்காய் நடக்கிறார்.
கணேஷ்: ஜூலி, அதென்ன impudence, insolence?
ஜூலி: impudence என்றால் அகங்காரம், insolence என்றால் துடுக்கு. அடுத்து நீ கேட்கும் முன்னரே சொல்லி விடுகிறேன். Brazen என்றால் வெட்கங் கெட்ட இயல்பு.
வீரபரகேசரி: என்ன மேலும்?
வண்ணப் பறவை: மேலும் மன்னா, வலசைக்கு வந்து நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தை பெறுவது இயற்கை, அது இல்லாவிட்டால் எங்கள் இனம் அழிந்து போகும். உங்க எல்லைப் பிரச்னைக்கு எங்களை ஏன் பலியாக்க வேண்டும்?
வீரபரகேசரி: நான் ஆணையிட்டால் இட்டதுதான்.
வண்ணப் பறவை: மேலும் மன்னா, இந்த உலக
மயமாதல் யுகத்தில் எங்களுக்கு எல்லையே இல்லை. எல்லா நாடும் எம் நாடே. நாங்கள் பறவைகள்.
வீரபரகேசரி சமையல்காரர்களிடம்: லகுட பாண்டிகளா, இந்த பறவையை உயிரோடு றெக்கையைப் பிடுங்கி நெருப்பில் வாட்டி சுத்தம் செய்து நெய்யில் வறுத்துக் கொண்டு வாங்க. அதை என் நாய்க்குப் போடுங்க.
வண்ணப் பறவை: மன்னா, நானே பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து எலும்பும் தோலுமாக இருக்கிறேன், என்னை வறுத்தால் ஒன்றும் எஞ்சாது, மேலும் ... நான் உங்களுக்கு ஒரு சேதி கொண்டு வந்திருக்கிறேன். யாரிடம் இருந்து எனத் தெரிந்தால் you will be blown away. அசந்து போவீர்கள்.
வீரபரகேசரி (ஆர்வமாய்): யார்?
வண்ணப் பறவை: நடிகை, பேரழகி யாங் மி.
இப்போதெல்லாம் அவர் உங்கள் மீதுள்ள பெருங்காதல் காரணமாய் தன் பெயரை யாமினி என மாற்றியிருக்கிறார்.
வீரபரகேசரி: அப்படியா? அமைச்சரே, இந்தப் பறவையை என் விருந்தினராக அந்தப்புரத்தில் தங்க வை.
சகல வசதிகளும் பண்ணிக் கொடு. Treat her like royalty.
கணேஷ்: அதென்ன ராயல்டி?
ஜுலி: ராஜ வம்சம். ஒருவரை மிக நன்றாக விருந்தோம்பல் செய்வதே treat somebody like royalty.
(இனியும் பேசுவோம்)