இளைஞர்மணி

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் சான்றிதழ்  படிப்பு!

​கேரள மாநிலம்  கோழிக்கோட்டில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIஎம் - கோழிக்கோடு)  சார்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது

எம். அருண்குமார்


கேரள மாநிலம்  கோழிக்கோட்டில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIஎம் - கோழிக்கோடு)  சார்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை தற்போது உலக அளவில் முக்கியமான துறையாக வேகமாக வளர்ந்து வருகின்றது.  எந்த ஒரு பொருள் மற்றும் சேவையைப் பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கிய பங்காற்றுகிறது.  வருகின்ற  2025 - ஆம் ஆண்டில் இந்தியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையின் மதிப்பு 160 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.     டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுவதற்கான அனுபவத்தையும், திறமையையும் பெறுவதற்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வழங்கும் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் சான்றிதழ் படிப்பு உதவியாக இருக்கும்.

இந்த  டிஜிட்டல் மார்க்கெட்டிங்     மற்றும் அனாலிட்டிக்ஸ் சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.  மேலும் ஓராண்டு வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும்.  இந்த படிப்பின் கால அளவு 10 மாதங்களாகும்.  பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மணி நேரம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்.   டிசம்பர் 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 17.12.2020 இந்த படிப்புக்கான கட்டணத்தை தவணைகளிலும் செலுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : https://iimk.eruditus.com/digital}marketing}and}analytics/index.php Gu  என்ற இணையதள முகவரியில் பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT