கரோனா தீநுண்மி தொற்றுநோய், மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, வர்த்தகத்திலும் நிலையான மாற்றத்திற்கு வித்திட்டுஉள்ளது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக அளவில் போட்டி நிலவி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சிகளில், சோதனைகளில் ஈடுபட்டுள்ளன.
தேவை பெருக்கம்:
உலக அளவில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 10 சதம்உயரும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதுப்புது நோய்கள் தோன்றுகின்றன. கரோனா போன்ற பெருந்தொற்று நோய்களும் மனித குலத்தைத் துன்புறுத்துகின்றன. மருந்துகளின் தேவை முன்னெப்போதும்இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளது. மக்கள் தொகைப் பெருக்கமும் மருந்துகளின் தேவையை அதிகரித்துள்ளது. மருந்து உற்பத்தித் தொழிலில்ஏற்பட்டுள்ள தேவைகளை நிறைவுசெய்ய, இத்தொழிலுக்கு திறன் படைத்த தகுதியான ஆட்களின் தேவையும் பெருகி வருகிறது. இத்தொழிலில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
நுட்பம்சார் கற்றல்:
மருந்து உற்பத்தித் தொழிலுக்குப்புதிதாக வந்து சேருவோரும், அத்தொழிலில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் அப்பணியில் நிலைத்திருக்கவும் மறுதிறனடைதல் வேண்டும். ஏற்கெனவே உள்ள திறன்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மறுதிறனடைதலுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கல்வி கை கொடுக்கிறது. கடினமான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு தொழில்நுட்பம் தான் ஒரே வழியாக உள்ளது. இதற்கு எளிதான கற்றல் வாய்ப்புகளை அளிக்கத் தொடங்கியுள்ளது "செயற்கை நுண்ணறிவு'த் (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்)துறை. மருந்து உற்பத்தித் தொழிலின் கற்றலைப் புரட்டிப்போட்டு வரும் செயற்கை நுண்ணறிவு, அப்படி என்ன தான் செய்கிறது?
உருவகப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம்:
எதிர்காலத்தில் நேரக் கூடியதை முன்கூட்டியே கணிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு, மருந்து உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க இயலும். அதாவது, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் வகுக்கப்பட்ட உருவகப்படுத்தப்பட்ட பயிற்சி திட்டம், மருத்துவத்துறையின் தேவைகளை முன்கூட்டியே நன்கறிந்து, அதை கற்றுக் கொடுக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிகழக் கூடிய சூழலை எதிர்கொள்ள முடியும்.
இத்துறை சார்ந்தவர்கள், போட்டித்திறன் மிக்கவர்களாகவும் வலுப் பெறவும் இவ்வகை பயிற்சி உதவும்.
இதற்கு கரோனா பெருந்தொற்றையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். கரோனா பெருந்தொற்றைக் குணப்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளை ஆராய்ந்து, அது தொடர்பான விவரங்களிலிருந்து, மருத்துவம் தொடர்பானவர்கள் புதிதாக எவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற பாடத்திட்டங்களை - பயிற்சி முறைகளை செயற்கை நுண்ணறிவு முறையால் உருவாக்க இயலும். அது தரும் உருவகக் காட்சிகள் கண்முன்விரிவதால் கற்றுக் கொள்வதும் எளிதாக இருக்கும்.
செயல்திறன் கண்டறிதல்:
மருந்து உற்பத்தித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கற்றுக் கொள்வதற்கு தேவையான நூல்களுக்கு பஞ்சம் எதுவுமில்லை. இணையதளத்திலும், ஏடு
களிலும் ஏராளமான தரவுகள் குவிந்துள்ளன. நமது தேவையை அறிந்து, தேடிப் பிடித்துக் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், அப்படிக் கற்றுக் கொண்டு, குறிப்பிட்ட பயிற்சிகளை எடுத்துக் கொண்டவர்கள், அதைச் செயல்படுத்தும்போது எவ்வகையில் செயல்படுத்துகிறார்கள் என்பதைத்தான் செயல்திறன் என்கிறார்கள். ஒரே பயிற்சியை எடுத்துக் கொண்டவர்கள், நடைமுறையில் அதை எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள்? என்பதைக்
கண்டறிவது மிகவும் முக்கியமாகும். இதற்கு செயற்கை நுண்ணறிவு கை கொடுக்கிறது.
செயல்திறனுக்கான கூறுகளை வகுத்துக் கொண்டு, அதனடிப்படையில் பயிற்சியாளரின் வேலையிடச் செயலை தரவுகளாக மாற்றி, உள்ளீடு செய்வதன் மூலம் செயல்திறனை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
மலிவான கற்றல்:
புதிதாக மருந்து உற்பத்தித்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய புதிய மருந்துகள், கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்ச்சியான பயிற்சி அளிப்பது
அவசியமாகும். கரோனா போன்ற பெருந்தொற்று உலக மக்களைப் பெரிய அளவுக்குப் பாதிக்கும்போது, நோய்க்கான மருந்துகளை அல்லது தடுப்பு மருந்துகளைக் கண்டு
பிடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது இத்தகைய பயிற்சி தருவது என்பது கடினமான பணியாக மாறிவிடுகிறது. புதிய மருந்து அல்லது தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தாலும், அதை கடைசி நோயாளி வரைக்கும் கொண்டு சேர்ப்பது, அதை விற்பனை செய்வது, நல்ல விலைக்கு விற்பனை செய்வது என்பதெல்லாம் கடினமானதாகிவிடுகிறது.
மருந்து வர்த்தக நெருக்கடி ஏற்படும்போது, கற்றல் மற்றும் மேம்பாட்டு இலக்குகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு
விடுவது இயல்பாக நிகழக் கூடியது. இதற்கும் தீர்வுதருகிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
தனிநபர் அல்லது பணிக்குழுவினர்களுக்கு அவர்களுடைய தேவைக்கேற்ப தனித்தனியே கற்கும் முறைகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தயாரித்து அளிக்க முடியும். பணியாளரின் தற்போதைய திறனை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கற்றுக் கொள்
வதற்கான இலக்குகளை நிர்ணயித்து, பயிற்சித் தொகுதியைத் தயாரிக்க
இயலும். சிறப்பு பயிற்சியாளர்
இல்லாமலேயே, இப்பயிற்சியை செயல்படுத்த முடியும். இதனால் பயிற்சிக்கான செலவை கணிசமாகக் குறைக்க முடியும். அதனால் மலிவான கற்றல் சாத்தியமாகும்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். அதேசமயம், பயிற்சியாளர், எதையெதையெல்லாம் கற்று தேர்ந்திருக்கிறார் என்பதையும் கண்காணிக்க முடியும். எனவே, திறனடைதல், மறுதிறனடைதல், திறன் பெருக்குதல் என அனைத்திற்கும் பொருந்தக் கூடியதாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் உள்ளன.
மருந்து உற்பத்தி தொழிலில் நிலையான பயிற்சியும் கற்றலும் தேவைப்படுகிறது. அது நிறுவனத்திற்கும் வளர்ச்சிக்கும், பணியாளரின் திறன் மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமாகிறது. இதுபோன்றபயிற்சிகள், நிறுவனங்களில் மட்டுமல்லாது, வெளியிலும் கிடைக்கின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளை எளிதில் கைப்பற்ற முடியும். செயற்கை நுண்ணறிவுசார் பயிற்சி முறைகளில் ஈடுபடுத்திக் கொள்வது, துறை சார்ந்த வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.