காலத்தின் தேவைக்கேற்ப கல்வியும் மாற்றம் பெறுகிறது. எம்பிஏ படிப்பில் புதியதுறை சார்ந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
2 ஆண்டுகளுக்கான முதுநிலை பட்டய மேலாண்மை (பிஜிடிஎம்-/முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ- பட்டப்படிப்புகளை 2019}ஆம் ஆண்டு முதல் வழங்க அகில இந்திய தொழில்கல்வி மன்றம்
(ஏ.ஐ.சி.டி.இ.- தொடங்கியது. சிக்கல்தீர்வுசார் புதுமையாக்கம், தொழில்முனைப்பாற்றல்திறன், தொடக்க முதலீடுகளை திரட்டுவது உள்ளிட்ட இயல்புகளை வளர்த்தெடுப்பதற்காக தொடங்கப்பட்டிருக்கும் எம்பிஏ (இன்னோவேஷன், என்ட்ரபுரோனர்ஷிப் & வென்சர் டெவலப்மென்ட்}ஐ.இ.வி.- படிப்பின் வாயிலாக புதிய தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள்: இதற்காக இந்தியா முழுவதும் 15 உயர்கல்வி நிறுவனங்களில் எம்பிஏ (ஐ.இ.வி.- படிப்புகளை வழங்க ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது. புதுமையாக்கம் மற்றும் வணிக அடைக்காப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு பயிற்சி அளிக்க
தகுதிவாய்ந்த கல்விநிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல்கல்லூரி} கோவை , வேல்டெக் ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா ஆர் அண்ட் டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்}மொறை, திருவள்ளூர், குமரகுரு தொழில்நுட்பக்கல்லூரி}கோவை , டாக்டர்.எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்}சென்னை , புதுச்சேரியில் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் எம்பிஏ
(புதுமையாக்கம், தொழில்முனைப்பாற்றல், தொடக்கமுதலீடு மேம்பாடு- படிப்பு வழங்கப்படுகிறது. தமிழகம்,புதுச்சேரி தவிர, ஒடிசா, குஜராத், உத்தர்கண்ட், தில்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 15 கல்விநிறுவனங்களில் மட்டும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
நுழைவுத்தேர்வு: எம்பிஏ(ஐ.இ.வி.- படிப்பை அளிக்கும் கல்லூரிகளில் சேர்க்கை அளிப்பதற்கு தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேசிய அளவிலான புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைப்பாற்றல் பொதுநுழைவுத்தேர்வு(சி.இ.டி.}ஐ.இ.- என்ற இணையவழி தேர்வு நடத்தப்படுவதுவழக்கம். இத்தேர்வு செப்.5 }ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவல் காரணமாக, நிகழாண்டுக்கானபொதுநுழைவுத்தேர்வை ஏ.ஐ.சி.டி.இ. ரத்து செய்துள்ளது. இதுதவிர, எம்பிஏ படிப்புக்கான தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த சி.ஏ.டி., எக்ஸ்.ஏ.டி., சி.எம்.ஏ.டி., ஏ.டி.எம்.ஏ., எம்.ஏ.டி., ஜி.எம்.ஏ.டி. போன்ற பொதுநுழைவுத்தேர்வுகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை தயார் செய்து, எம்பிஏ(ஐ.இ.வி.- அல்லது முதுநிலை பட்டயமேலாண்மை(பி.ஜி.டி.எம்.- படிப்புகளுக்கு சேர்க்கைஅளிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை https://www.aicte-india.org, https://www.mic.gov.in, http://cet.cbtexam.in ஆகிய இணையதளங்களை அணுகலாம்.
எம்பிஏ (ஐ.இ.வி.-} இன் தனித்தன்மைகள்: வழக்கமான எம்பிஏ பட்டப்படிப்புக்கும், எம்பிஏ (ஐ.இ.வி.- பட்டப்படிப்புக்கும் ஏராளமான வேறுபாடுகள், தனித்தன்மைகள் உள்ளன. பெருநிறுவன உலகத்தின் தினசரி செயல்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த தெளிவை அளிப்பதே வழக்கமான எம்பிஏவின் நோக்கமாகும். மாறாக, எம்பிஏ(ஐ.இ.வி.- பட்டப்படிப்பைப் பயிலும் மாணவர்களிடம், சமுதாயச் சிக்கல்களுக்கான புதுமையான தீர்வுகளை முன்வைக்கும் ஆற்றலை வளர்த்தெடுக்க முனைகிறது. தற்போது இயங்கிவரும் பெருநிறுவனங்கள் மற்றும் அதன் வணிகச் செயல்பாடுகளை பன்முனைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது
தான் வழக்கமான எம்பிஏ பட்டப்படிப்பாகும். நிறுவனத்தை லாபகரமானதாகவும், நிலையானதாகவும் கட்டமைத்து, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எம்பிஏ(ஐ.இ.வி.- பட்டப்படிப்பின் நோக்கமாகும்.
நல்ல எதிர்காலம்: தொழில்முனைவோராக வெற்றி பெற்றவர்கள் வகுப்பறைகளில் பாடம் சொல்லி தருவது, மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த பிரச்னைகளை அணுகுவதற்கான பார்வையை ஏற்படுத்தித் தரும்.
இத்தனை முன்முயற்சிகளுக்கு பின்னரும், தொழில்முனைப்பாற்றல் கல்விக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தான் களநிலவரமாகும். இந்த குறைபாட்டுக்கு முக்கிய காரணமாக மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் கூறுவது, தொழில்முனைப்பாற்றல் கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் இல்லை என்பது தான்.
இந்த குறையைப் போக்குவதற்கு ஏற்கெனவே தொழில்முனைவோராக வெற்றிபெற்றவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது.
தொழில்முனைப்பாற்றலை வகுப்பறைகளில் போதிக்கும் கல்வியாளர்கள் பெருக வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. தொழில்முனைவோராவதைக் காட்டிலும் கைநிறைய ஊதியம் கிடைக்கும் வேலையில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே காணப்படுவதும் தொழில்முனைப்பாற்றல் கல்விக்கு பாதகமாக உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இந்த தொழில்முனைப்பாற்றல் சார்ந்த கல்வி, அடுத்த 5 ஆண்டுகளில் வேகமெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பள்ளிப்பருவத்திலேயே தொழில்முனைப்பாற்றல் கல்வியை அறிமுகம் செய்தால், அது உயர்கல்விக் கனவை ஒளிமயமாக்கும் வாய்ப்புள்ளது. எம்பிஏ
(ஐ.இ.வி.- பட்டப்படிப்பை அறிமுகம் செய்வதில் அதிக அளவிலான உயர்கல்வி நிறுவனங்கள் பங்காற்றுவதும் தொழில்முனைப்பாற்றல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.