இளைஞர்மணி

முகநூல்... பதிவுகளைத் தரவிறக்கலாம்!

அ. சர்ஃப்ராஸ்


""உன் நண்பர்களைப் பற்றி சொல்; நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்'' என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ""உன் முகநூல் ஐடியைக் கொடு; உன்னைப் பற்றியும் உன் நண்பர்களைப் பற்றியும் விவரமான ஆதரங்களுடன் கூறுகிறேன்'' என்று சொல்ல முடியும்.
அந்த அளவுக்கு பலர் தங்களை அறியாமலேயே நாள்தோறும் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். அதற்கு அவர்களது நண்பர்கள், உறவினர்கள் பதிலளித்தும் எழுதிய பதிவுகளோ ஏராளமாக இருக்கும். ஏன் பதிலளித்தவர்களே மறந்து போகும் அளவுக்கு தினசரி பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முகநூலில் உள்ள விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பேக்பிலாஸ், டிராப் பாக்ஸ், கூகுள் போட்டோஸ், கூஃபெர் ஆகியவற்றில் தரவிறக்கம் செய்ய கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது.
சாட், போஸ்ட், நோட்ஸ்களைப் பதிவிறக்கம் செய்யும் புதிய சேவைக்கான அனுமதியைக் கடந்த திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தகவல்களை கூகுள் டாக்குமென்ட்ஸ், டிராப் பாக்ஸ், பிளாக்கர், வேர்ட்பிரஸ்.காம் ஆகியவற்றில் தரவிறக்கம் செய்யஅனுமதி அளித்துள்ளது.
தனிமனிதப் பாதுகாப்பு, பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உங்கள் தகவல்களை மூன்றாம் பிரிவுத் தளங்களில் பகிரும்போதும் மீண்டும் கடவுச் சொல் பதிவிட வேண்டும் என்றும் இதன் மூலம் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக தரவிறக்கம் செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய சேவையைப் பெற முகநூலில் உள்ள பிரைவசி -செட்டிங்ஸ்-யுவர் பேஸ்புக் இன்பர்மேஷன் என்பதைக் கிளிக் செய்து "டிரான்ஸ்ஃபர் ஏ காப்பி ஆஃப் யுவர் இன்ஃபர்மேஷன்' என்பதைச் சொடுக்கினால் போதும் மீண்டும்
உங்கள் கடவுச்சொல்லைப் பதிவு செய்ய முகநூல் அறிவுறுத்தும்.
பின்னர் போட்டோ, விடியோ, போஸ்ட் என எந்தந்த தகவல்
களைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற விவரங்களைத் தேர்வு செய்து, எந்த தளத்தில் தரவிறக்கம் செய்ய இருக்கிறோமோ அதன்
கடவுச் சொல்லைப் பதிவிட்டவுடன் "கன்பார்ம் டிரான்ஸ்ஃபர்' பொத்தானை அழுத்தினால்போதும். உங்கள் முகநூல் தரவுகள் பதிவிறக்கமாகிவிடும்.
முகநூல் கணக்குளை மூட விரும்புபவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தரவுகளைச் சேமித்து வைக்கலாம். அதே நேரத்தில் முக்கிய தகவல்களைச் சேமிக்கவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT