முகப்பு
இளைஞர்மணி

வளர்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்பம்!

நிதியியல் தொழில் நுட்பம் என்றால் தெரியுமா? நீடித்த நிலைத்த பணிவாய்ப்பும், தொழில் தொடங்கி நடத்துவதற்கும் உதவும் வாய்ப்புள்ள படிப்புதான் நிதியியல் தொழில்நுட்ப படிப்பு.

இளைஞர்மணி

வளர்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்பம்!

நிதியியல் தொழில் நுட்பம் என்றால் தெரியுமா? நீடித்த நிலைத்த பணிவாய்ப்பும், தொழில் தொடங்கி நடத்துவதற்கும் உதவும் வாய்ப்புள்ள படிப்புதான் நிதியியல் தொழில்நுட்ப படிப்பு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

நிதியியல் தொழில் நுட்பம் என்றால் தெரியுமா? நீடித்த நிலைத்த பணிவாய்ப்பும், தொழில் தொடங்கி நடத்துவதற்கும் உதவும் வாய்ப்புள்ள படிப்புதான் நிதியியல் தொழில்நுட்ப படிப்பு.
பைனான்சியல் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்தப் படிப்பு வங்கிப் பணிகளுக்கு பயன்படக் கூடியது. வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவைகளை அதிக பயன்பாடு மிகுந்ததாக, வேகமானதாக, நேர சேமிப்பு கொண்டதாக, சுலபமாக பெறக் கூடியதாக இந்த நிதியியல் தொழில் நுட்பம் மாற்றிவிட்டது.
சர்வதேச பின்டெக் சாப்ட்வேர் மற்றும் சேவை வளர்ச்சி 2020-ஆம் ஆண்டில் 45 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துவிட்டது. உலகில் அதிக நிதி தொழில்நுட்ப தொடக்கங்களை மேற்கொள்ளும் நாடுகளின் வரிசையில் முதல் மூன்று இடங்களிலும் இந்தியா இடம் பிடித்துள்ளது. 2021, 2022 ஆண்டுகளில் 2-5
மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய நிதி தொழில் நுட்பத்துறை வளர இருக்கிறது.
நிதியியல் பரிவர்த்தனைகளைக் கையாளும் தொழில் நுட்பம், நிதியியல், கணக்கியல், வணிகவியல், தகவல் அமைப்புகள், போன்றவற்றில் சிறந்த புரிதலை பெறுவதுடன் பல்திறன் செயல்பாடுகளை அறிய இந்த நிதியியல் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு உதவுகிறது. பட்டப் படிப்பு படித்தவர்கள் முதுகலைப் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் சேரலாம்.
பட்டப் படிப்பில், கணக்கியல், நிதியியல், மேலாண்மை அறிவியல் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. நேரடி பயிற்சிகளும் தரப்படுகின்றன. தேவையான தொழில் சார்ந்த திறன் பயிற்சிகளும், அதனை நிதியியல் அமைப்புகளில் பயன்படுத்துவது எப்படி என்பதற்கும் பயிற்சி தரப்படுகிறது.
ஒவ்வொருவரும் தான் தேர்ந்தெடுக்கும் பிரிவில் திறமை பெற்று முன்னேறும் வகையில் கற்பிக்கப்படுகிறது. பட்டப்படிப்புக்கு பின் 2 ஆண்டு முதுகலை பட்டப் படிப்பும் இத்துறையில் உள்ளது. வார இறுதி நாள்களில் (சனி, ஞாயிறு) என வாரம் 2 நாள் கல்வியாக டிப்ளமோ (முதுகலை) கற்பிக்கப்படுகிறது.
இப்படிப்புகளில் பிளாக் செயின், கிரிப்போ கரன்சி, இயந்திரவியல், செயற்கை அறிவாற்றல், இணையதளம் சார்ந்த பெரிய தரவுகளை உருவாக்குவதற்கு ஏற்ற புரோகிராம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.
நானூறுக்கும் மேற்பட்ட நிதி தொழில் நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
பழைய முறையிலான வங்கிச் சேவைகள் - நிதியியில் தொழில் நுட்ப முறையில் மாறும் போது விரைவாகவும், சுலபமாகவும் சேவைகளை மக்களுக்கு வழங்க உறுதியளிக்கிறது. எனவே, நிதியியல் தொழில் நுட்ப நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதைப் பயின்றவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. நிதி ஆலோசனை நிறுவனங்களைத் தொடங்கியும் முன்னேறலாம்.
பைனான்சியல் டெக்னாலஜி எனும் இப்படிப்பு பற்றியும், இந்தியாவில் இப்பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை அறியவும், இந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் கீழ்கண்ட வலைதளங்களைப் பாருங்கள்.

h‌t‌t‌p‌s://‌w‌w‌w.‌i‌i‌l‌m.‌e‌d‌u,  ‌h‌t‌t‌p‌s://‌w‌w‌w.‌i‌n‌v‌e‌st‌i‌n‌d‌ia.‌g‌o‌v.‌i‌n/,  ‌w‌w‌w.‌d‌r‌i‌s‌h‌t‌i‌l​a‌s.​c‌o‌m,   ‌w‌w‌w.b‌u‌s‌i‌n‌e‌s‌s‌w‌o‌r‌l‌d.‌i‌n, ‌h‌t‌t‌p‌s://​a‌s‌s‌e‌t‌s.‌k‌p‌m‌g/​c‌o‌n‌t‌e‌n‌t/‌da‌m/‌k‌p‌m‌g/‌p‌d‌f/2016/06/​F‌i‌n​T‌e​c‌h-‌n‌e‌w.‌p‌d‌f.

முழு கட்டுரையைப் படிக்க →