இளைஞர்மணி

டெலிகிராமிலும் விடியோ சாட்!

வாட்ஸ்ஆப் தனது புதிய கொள்கைத் திட்டத்தால் இழந்த பயன்பாட்டாளர்களை டெலிகிராம் செயலி தனது புதிய சேவைகள் மூலம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

தினமணி

வாட்ஸ்ஆப் தனது புதிய கொள்கைத் திட்டத்தால் இழந்த பயன்பாட்டாளர்களை டெலிகிராம் செயலி தனது புதிய சேவைகள் மூலம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் அதிக பதிவிறக்கம் பெற்ற செயலியாக டெலிகிராம் சாதனை படைத்தது. அதில் இந்தியாவில்தான் அதிகமானோர் டெலிகிராம் செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

எனினும், வாட்ஸ்ஆப் செயலியின் குழு விடியோ சாட் வசதி டெலிகிராமில் இல்லாதது குறையாகவே இருந்தது. எனினும், வாய்ஸ் சாட்டில் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் அது சேவையை வழங்கி வந்தது.

கரோனா தாக்கத்தால் வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை ஓராண்டில் விரைவாக அதிகரித்துள்ளதால், வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் மீட் செயலிகளைப்போல் டெலிகாரமும் விடியோ சாட்டில் அதிகபட்சமாக 30 பேர் பங்கேற்கும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் போன் மட்டுமல்லாமல்,  கணினி, டேப்லட்களிலும் இந்த சேவையைப் பெறலாம். மேலும், குழு விடியோ கால்களை தனி விண்டோவில் பார்க்கும் வகையிலும் புதிய வசதி அளிக்கப்பட்டுள்ளது.

விடியோ கால் திரையைப் பகிரவும், பேசும் போது தேவையற்ற சுற்றுப்புற ஒலிகளை ரத்து செய்யவும் முடியும்.

விடியோ கால்களில் பின் திரையை அலங்கரிக்கும் வகையில் அனிமேஷன், வண்ணங்கள் புதிதாக இடம் பெறுள்ளன.

எழுத்து வடிவிலான மெசேஜ்களில் ஸ்டிக்கர்ஸ், அனிமேடட் ஏமோஜி ஆகியவற்றை இணைக்கவும், பயன்பாட்டாளர்களே ஸ்டிக்கர்களைத் தயாரித்து இணைக்கும் புதிய வசதிகளையும் டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT