60 நொடி... கரோனா பரிசோதனை முடிவு!
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா தொற்றுக்கு அஞ்சாதவர்கள் யாருமில்லை. கண்ணுக்குத் தெரியாத இந்த தீநுண்மி லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று வருவதுதான் இதற்குக் காரணம்.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா தொற்றுக்கு அஞ்சாதவர்கள் யாருமில்லை. கண்ணுக்குத் தெரியாத இந்த தீநுண்மி லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று வருவதுதான் இதற்குக் காரணம்.
கரோனா தொற்று பாதிப்பு முடிவைக் கண்டறிய தொடக்கத்தில் இரண்டு நாள்கள் வரையிலானது. தற்போது தொற்றை துல்லியமாகக் கண்டறிய 24 மணி நேரம் ஆகிறது. உடனடி பாதிப்பு முடிவை அறிந்து கொள்ள குறைந்தது அரை மணி நேரமாகிறது. ஆனால் அந்த முடிவை யாரும் நம்புவதில்லை.
எனினும், உலகம் முழுவதும் கரோனா தொடர்பான கண்டுபிடிப்புகள் தினந்தோறும் புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிரித்தானிக்ஸ் என்ற ஸ்டார்அப் நிறுவனம் கரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை நொடிப் பொழுதில் கண்டறியும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
மலேசியாவில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கானோர் சிங்கப்பூருக்கு பணியாற்ற சென்று வருவதால் அவர்களுக்கு கரோனா சோதனையை நொடிப் பொழுதில் செய்திட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர் சுகாதார நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த கருவியை மலேசிய எல்லைப் பகுதியில் நிறுவ பிரித்தானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தப் பரிசோதனையுடன் கொரோனா ராப்பிட் ஆன்டிஜன் பரிசோதனையும் செய்ய சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த இயந்திரத்தில் உள்ள சிறு ஊது
குழாயில் ஊதினால் போதும், 60 நொடி
களுக்குள் கரோனா தொற்று உள்ளதா
இல்லையா என்பது தெரிந்துவிடும்.
கடந்த ஆண்டு இந்தக் கருவியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டப்
பரிசோதனையில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக துல்லியமான முடிவுகளை இந்தக் கருவி தந்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஊதுகுழாய் அளிக்கப்படுவதால் தொற்று பரவுவதும் தடுக்கப்படும் என்று பிரித்தானிக்ஸ் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.