இளைஞர்மணி

ஐஐடி மெட்ராஸ் ஊக்கத் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு!

சென்னை ஐஐடியில்  ஊக்கத் தொகையுடன் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அன்ட்  டேட்டா சயின்ஸ் என்ற  இரண்டு ஆண்டு ஆராய்ச்சி படிப்பு  தொடங்க உள்ளது. 

எம். அருண்குமார்

சென்னை ஐஐடியில் ஊக்கத் தொகையுடன் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ் என்ற இரண்டு ஆண்டு ஆராய்ச்சி படிப்பு தொடங்க உள்ளது.

சென்னை ஐஐடியில் பல்வேறு படிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ் தொடர்பான ஆராய்ச்சி படிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மிகப் பெரிய அளவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இக்காலத்தில், தானியங்கி தொழில்நுட்பம் கூடுதல் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. தானியங்கி தொழில்நுட்பத்துக்குத் துணை நிற்பதுதான் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம்.

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ்: சென்னை ஐஐடி-இன் ராபர்ட் போச் சென்டர் பார் டேட்டா சயின்ஸ் அன்ட் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸூம், நாராயணன் ஃபேமிலி பவுண்டேஷன் என்ற அமைப்பும் இணைந்து இந்தப் படிப்பை நடத்துகின்றன.

இந்த ஆராய்ச்சிப் படிப்பில் 27 வயதுக்கு உட்பட்ட இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் சேரலாம்.

இந்த ஆராய்ச்சிப் படிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் தொடர்பான இரண்டாண்டு படிப்பாகும். இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்க தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இந்தப் படிப்பில் சேரும் பட்டதாரிகள் உலகின் மிக முக்கிய ஆராய்ச்சியாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

உலகின் சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் தங்களுடைய கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், ஆராய்ச்சி சம்பந்தமான மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் பெறுவார்கள். மேலும் டேட்டா சயன்ஸ் அன்ட் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: +91-44-22578980 என்ற தொலைபேசி எண் (அல்லது) contact@rbcdsai.org இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT