கூகுள் போட்டோஸில் படங்கள்!
ஸ்மார்ட் போன்கள் புழக்கத்தில் வந்ததில் இருந்து பயன்பாட்டாளர்களின் இனிய நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படங்களாக சேமிக்கப்படுகின்றன.
ஸ்மார்ட் போன்கள் புழக்கத்தில் வந்ததில் இருந்து பயன்பாட்டாளர்களின் இனிய நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படங்களாக சேமிக்கப்படுகின்றன.
முன்பு நிகழ்வுகளை ஓரிரண்டு புகைப்படங்கள் எடுத்து காணும்நிலை மாறி, தற்போது துல்லியமான ஸ்மார்ட்போன் கேமராக்களின் மூலம் கணக்கில் அடங்காத புகைப்படங்கள் நொடிப் பொழுதில் எடுக்கப்படுகின்றன. இவற்றை ஸ்மார்ட்போனில் சேகரிக்க இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால், பல நிறுவனங்கள் "கிளவுட்' சேமிப்பு எனப்படும் இணையதள சேமிப்பு வசதிகளை வழங்கி வருகின்றன.
இந்த முறையில் சேமிக்கப்படும் புகைப்படங்களை இணையதள வசதியுடன் நாம் எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும் என்பதால் பிரபலமடைந்துள்ளது.
இந்த சேவையில் முன்னணி நிறுவனமான "கூகுள் போட்டோஸ்' இலவச "கிளவுட்' சேமிப்பை அடுத்த மாதம் ஜூன் 1-ஆம் தேதி முதல் கட்டணமாக மாற்ற உள்ளது.
ஏற்கெனவே இதில் உள்ள புகைப்படங்கள் கூகுளின் ஜி-மெயில் கணக்குக்கு ஒதுக்கப்பட்ட 15 ஜிபி சேமிப்புக்கு உள்ளாக இருந்தால் இலவசம். அதையும் மீறி சென்றால் கூகுள் ஒன்னில் மாதக்கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது 15 ஜிபிக்குள் வரும் வகையில் பழைய படங்களை அழிக்க வேண்டும்.
நூறு ஜிபி இடத்துக்கு மாதம் ரூ.130, இருநூறு ஜிபிக்கு மாதம் ரூ.210, இரண்டு டிபிக்கு மாதம் ரூ. 650, பத்து டிபிக்கு மாதம் ரூ. 3,250-ஆகவும் கூகுள் கட்டணம் நிர்ணயித்துள்ளது. எனினும், கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிலர் தங்களுக்குத் தெரியாமலேயேகூகுளில் புகைப்படங்களை தானாகவேபதிவேற்றம் செய்யும் அனுமதியை அளித்திருந்தால் இந்த சேமிப்பு இடம் குறைவாக இருக்கும். இதனால் உங்கள் கூகுள் மெயில் கணக்கில் சேமிப்பு இடம் நிறைவடைந்துவிட்டது என எச்சரிக்கை தகவல் வந்து கொண்டே இருக்கும். எத்தனை பழைய இமெயில்களை அழித்தாலும் இந்த எச்சரிக்கை தகவல் அழியாது. கூகுள் புகைப்படங்களை அழித்து சேமிப்பு இடத்தை காலியாக ஆக்கினால்தான் இந்த எச்சரிக்கை தகவல் அழியும்.
கூகுளில் உங்கள் சேமிப்பு இடத்தைத் தெரிந்து கொள்ள ஜிமெயிலில் வலதுபுற மேல் பகுதியில் உள்ள கூகுள் ஆப்ûஸக் கிளிக் செய்து அதில் உள்ள போட்டோவுக்குள் சென்றால் உங்கள் கூகுள் புகைப்படங்களால் எடுக்கப்பட்டுள்ள இடத்தின் அளவு தெரிந்துவிடும்.
15 ஜிபிக்கு அருகே சேமிப்பு இடம் வந்திருந்தால், கூகுள் போட்டோஸில் உள்ள பழைய புகைப்படங்களைப் பாதுகாக்க பதிவிறக்கம் செய்து கணினியிலோ, தனியாக ஹார்ட்டிஸ்கிலோ சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.