இளைஞர்மணி

வணிக மின்னஞ்சல்... 10 சொற்கள்!

முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகள், புறாக்கள் மூலமாக தொடங்கிய தகவல் தொடர்பு, இன்று செல்லிடப்பேசிகள், கணினிகள் என்று நவீன காலத்தில் வந்து நிற்கின்றது.

கோமதி எம். முத்துமாரி

முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகள், புறாக்கள் மூலமாக தொடங்கிய தகவல் தொடர்பு, இன்று செல்லிடப்பேசிகள், கணினிகள் என்று நவீன காலத்தில் வந்து நிற்கின்றது. ஒரு செய்தி சென்று சேர பல நாள்கள் ஆன நிலையில் இன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்குக் காரணம்.

அதில், வாட்ஸ்ஆப், பேஸ்புக் என்று தகவல் பரிமாற்றத் தளங்கள் பல வந்தாலும் அலுவல், தொழில்ரீதியான மற்றும் தனிப்பட்ட முக்கியமான தகவல்கள், மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன.

வேலைக்குச் செல்லவிருப்போரும், வேலைக்குச் சென்று கொண்டிருப்போரும் எவ்வாறு மின்னஞ்சலைக் கையாள்கிறார்கள் என்பதை அவர்களுக்கு வேலை தரும் தொழில் நிறுவனங்கள் கவனிக்கின்றன.

ஒருவருக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் மிகவும் சுருக்கமாக அதேநேரத்தில் முழுமையான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

நேரில் பேசும்போது உங்களுடைய பேச்சு ஒருவரைக் கவர்வது போல, நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலும் பிறரைக் கவர்வதாக இருக்க வேண்டும். உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் ஏற்படுத்த வேண்டும். அதற்கு மின்னஞ்சலில் தகவல்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் சற்று சுவாரசியமாகவும் இருக்க வேண்டும்.

இதற்கு நீங்கள் மின்னஞ்சலில் பயன்படுத்தும் சொற்கள் உதவுகின்றன. மின்னஞ்சலை பெறுபவர் உங்களுக்கு எவ்வாறு பதில் அளிப்பார் என்பதை அந்த சொற்களே நிர்ணயிக்கின்றன.

இன்று பலரும் மின்னஞ்சலை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் சில குறிப்பிட்ட சொற்களை மின்னஞ்சல்களில் பயன்படுத்தும்போது நீங்கள் நேர்மறையான தாக்கத்தை உணரலாம்.

இப்போது, மார்க்கெட்டிங் துறை மூலமாக தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, சந்தைக்கு எடுத்துச் செல்ல மின்னஞ்சல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மின்னஞ்சல்களில் பயன்படுத்த வேண்டிய 10 முக்கிய சொற்களைப் பார்ப்போம்.

1.பெறுநரின் பெயர்: மின்னஞ்சல் அனுப்பும்போது பொதுவாக  Sir/Madam என்றே தொடங்குவதுண்டு. ஆனால், அவ்வாறு தொடங்குவதற்குப் பதிலாக, மின்னஞ்சல் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருடைய பெயரைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்.

பொதுவாக குறிப்பிடுவதைவிட, பெறுநரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதும்போது, அந்த மின்னஞ்சல் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து எழுதியிருப்பதைப்போல பெறுநர் உணர முடியும்.

நீங்கள் ஒரு விளம்பரம் தொடர்பான மின்னஞ்சல் அனுப்பினாலும் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பெயர்களை தனியே குறிப்பிட்டு அனுப்பும்போது அது அவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மார்க்கெட்டிங் துறையில் இவ்வாறு பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களின் விகிதம் 137% அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

2. "புதிய' விஷயங்கள்: மக்கள் இப்போது புதுமையான விஷயங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். வித்தியாசமான முறையில் தங்களை அணுகுபவர்களையே மக்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்தவகையில் மின்னஞ்சலில் New என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பாருங்கள். உதாரணமாக ஒரு பொருளை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்றால் நியூ மாடல் என்பதைப் பயன்படுத்தலாம்.

மக்கள் இதுவரை பார்த்திராத ஒன்றைநீங்கள் வழங்கும்போது அது உங்களின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும்.

3. இலவசம்: இந்த உலகத்தில் இலவசத்தை யார்தான் விரும்பமாட்டார்கள்? இலவசம், மிகவும் கவர்ச்சியான சலுகையாகப் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் வணிக நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சலில் ச்ழ்ங்ங் என்ற வார்த்தை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரீ சிப்பிங், ஃப்ரீ ட்ரயல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தும்போது, மின்னஞ்சலைப் படிப்பவர்களுக்கு பொருள்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதேநேரத்தில்
அதனை மிகைப்படுத்தாத அளவுக்குஓரிடத்தில் மட்டும் ஃப்ரீ என்று குறிப்பிடலாம்.

4. நீங்கள்: அடுத்ததாக you என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். மின்னஞ்சல் செய்தியில் பொதுவாக இல்லாமல், ஒவ்வொரு இடத்திலும் யூ என்ற வார்த்தையைப் பிரயோகப்படுத்துவதன் மூலமாக பெறுநர் ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக உணர வைக்க முடியும்.

நீங்கள் நேரடியாகப் பேசுவது போன்ற ஓர் உணர்வு வாடிக்கையாளருக்கு ஏற்படும். உணர்வுப்பூர்வமாக வாடிக்கையாளரைக் கவரும்போது உங்களுடைய மின்னஞ்சலுக்கு அவர்கள் சிறப்பான முறையில் பதில் அளிப்பார்கள் என்று நம்பலாம்.

5.கண்டுபிடி: Discover அல்லது Find என்ற வார்த்தையைக் கேட்கும்போது மூளை சுறுசுறுப்பு அடைகிறது. இன்றும் கூட செய்தித்தாள்களில் சுடோகு போன்ற புதிர் சொல் விளையாட்டுகளில் ஈடுபடுவது மக்களிடையே பிரபலமாகத்தான் இருக்கிறது.

எனவே, உங்கள் மின்னஞ்சலில் ஏதேனும் ஒரு வினாவைத் தொடுத்து வாடிக்கையாளரை/பெறுநரைக் கண்டுபிடிக்கச் செய்யுங்கள். மின்னஞ்சல் செய்தியின் இறுதியில் இவ்வாறு செய்யலாம். இதுவும் வாடிக்கையாளரை உற்சாகப்படுத்தும்.

6. கற்பனை: கற்பனை என்பது நம்மை வேறு உலகத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு விஷயம். கற்பனைக்கு எல்லையில்லை என்பதால், மின்னஞ்சல் பெறும் நபரை நீங்கள் கற்பனை உலகத்துக்குக் கொண்டு செல்ல, உங்கள் விளம்பரத்துடன் தொடர்புடைய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு "கற்பனை செய்து பாருங்கள்' என்று குறிப்பிடலாம். இதற்கு ஐம்ஹஞ்ண்ய்ங் என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

7.எளிதானது: மின்னஞ்சல் என்பது வாடிக்கையாளருக்கு புரியும் மொழியில் எளிய நடையில் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் சொற்கள் அனைவருக்கும் தெரிந்தவையாக இருப்பது நல்லது. அவை உங்கள் எண்ணத்தை அப்படியே அவர்களுக்கு எடுத்துச் செல்லும். மேலும், மொத்தமாகப் படிப்பதை விட, ஒவ்வொரு வாரியாக பாயிண்ட்ஸ் அடிப்படையில் சுருக்கமாக வழங்கலாம். இது படிப்பவருக்கு எளிதாக இருக்கும்.

மேலும், easy என்ற வார்த்தையை முடிந்தால் எங்கேனும் பயன்படுத்துங்கள். ஈஸி வேய்ஸ், ஈஸி டூ அக்செஸ் என்பன போன்ற சொற்களை நீங்கள் பயன்படுத்தினால் அவை வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவரும்.

8.எப்படி செய்வது?: How என்ற சொல்லை மின்னஞ்சலில் பயன்படுத்துவதற்கான அடிப்படை மின்னஞ்சலைப் பெறுபவரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும்.

புதிய ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அதனைப் பெறுவது எப்படி? கையாள்வது எப்படி? என்பன போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும். எனவே, தேவைப்படும் இடத்தில் எப்படி என்ற வார்தையைப் பயன் படுத்துங்கள்.

9.உடனடி: Instant என்ற சொல்லைப் பெரும்பாலான இலவச விளம்பரங்களில் பார்த்திருப்போம். இந்தச் சொல்லும் வாடிக்கையாளர்களைக் கவரக் கூடியதே. "உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும்' என்று வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது விளம்பர உத்தியின் சிறந்த வழியாகும்.

10.ஏனெனில்: "ஏனெனில்' என்ற சொல் ஒரு செயலுக்குக் காரணமாகவும் பிரச்னையைத் தீர்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. எனவே, வாடிக்கையாளரின் பிரச்னையைத் தீர்க்கும்பொருட்டு இந்தச் சொல்லை சரியாகப் பயன்படுத்தினால் உங்கள் மின்னஞ்சலுக்கு அவர்கள் பதிலளிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

இறுதியாக, இந்த சொற்களை எல்லாம் கண்டிப்பாகப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று அவசியமில்லை. ஏனெனில், தேவையில்லாத இடத்தில் தேவையற்ற சொற்கள் வரக் கூடாது.

ஒரு சாதாரண விஷயத்தை அதிகமாக மிகைப்படுத்துவது போன்றும் இருக்கக் கூடாது. என்ன நோக்கத்திற்காக பயன்படுத்துகிறீர்களா அது சார்ந்த தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்துங்கள். அதிர்ச்சியடைய வைக்காமல், ஆச்சரியப்படுத்தாமல் வாடிக்கையாளரிடம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT