மகளிர்மணி

வெள்ளத்தில் சிக்கிய எல்லாருக்குமாக பிரார்த்தித்தேன்!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்த தன் பெற்றோரை  பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்திருந்தார் சமந்தா...

ஜி. அசோக்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்த தன் பெற்றோரை  பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்திருந்தார் சமந்தா...

சென்னையின் பெரு மழை, வெள்ளத்தில் இருந்து தப்பித்து விட்டீர்கள்....?

சென்னையில் இல்லாமல் போனதில்தான் எனக்கு வருத்தம். இருந்திருந்தால், பாதிக்கப்பட்டிருந்த பலருக்கு நேரில் உதவியிருப்பேன். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்து வரும் படத்துக்காக விஜயவாடாவில் இருந்தேன். தொடர் படப்பிடிப்புகளில் இருந்ததால் சென்னையில் பெரு மழை, வெள்ளம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் என் பெற்றோருக்கு பேசலாம் என தொடர்பு கொண்ட போதுதான், தொலைத்தொடர்பு எல்லாம் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. எந்த வகையிலும் என் பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற நிலை வந்தபோது அழுகையே வந்து விட்டது. இருந்தும், சென்னையில் உள்ள  சில நண்பர்களிடம் பேசும் சூழல் இருந்தது. அவர்களின் மூலம் பெற்றோர்களின் நலனை தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு சூழல் இதுவரை சந்திக்காத ஒன்று. அந்த நாள்களில் என் பிரார்த்தனைகள் எல்லாம் எல்லோருக்குமானதாக இருந்தது. முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ. 30 லட்சம் கொடுத்திருக்கிறேன். மக்களின் இழப்புகளை ஒப்பிடும் போது இது மிகக் குறைவு. பெரிய அளவில் எதாவது செய்ய வேண்டும் என தோன்றுகிறது பார்க்கலாம்.

மீண்டும் சூர்யா, விஜய் என மாஸ் ஹீரோ படங்களை கையில் எடுத்து அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டீர்கள்...?

இது எனக்கு தங்கமான தருணம் என்று சொல்லலாம். இப்போது "தெறி' படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறேன்.

அட்லி சார் படம். விஜய் சாருக்கு ஹீரோயின். "கத்தி' படத்துக்குப் பின் விஜய் சாருடன் நான் இணைந்து நடித்து வருகிற படம். "கத்தி' படத்தின் ஹிட் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒன்று. அதைத் தாண்டிய

வெற்றிக்கு உழைத்து வருகிறோம். தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள் என படங்கள் கைக்கு வந்து சேருவதில் மகிழ்ச்சி. இந்த இடம் நான் எதிர்பார்க்காத ஒன்று. கிடைத்ததை விட மனசு இல்லை.

அதனால் நித்தம் நித்தம் அதற்கான பயிற்சிகளில் என்னை முன் நிறுத்தி வருகிறேன். விஜய் சாருடன் இணைந்து நடிப்பது ஒரு நல்ல அனுபவம். அவருக்கு சூப்பர் காமெடி சென்ஸ். பேசிட்டே இருக்கும்போது சிரிக்க வைத்து விடுவார். அதைத் தாண்டி அவரின் நட்பு மிக உன்னதமானது. சூர்யா சார் கூட "24' படம் நடிக்கிறேன்.  ஒவ்வொரு படத்துக்கும் அவர் மெனக்கெடுகிற விதம் எனக்கு பிடிக்கும்.  அவரின் நடிப்பு ஆச்சரியம். இப்போது "தங்க மகன்' வந்திருக்கிறது. படம் பெரிய ஹிட். தனுஷ் சாருடன் எப்போது நடிப்பேன் என காத்திருந்தேன். இனியும் காத்திருப்பேன்.

"பத்து எண்றதுக்குள்ள' வில்லி கதாபாத்திரத்துக்கு வந்த கமென்ட்ஸ்...?

என் நண்பர்கள் எல்லாம் இதுவரைக்கும் நான் நடித்த படங்களை பார்த்து விட்டு, ""நீ ரொம்ப அழகா இருக்கே'' என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் "பத்து எண்றதுக்குள்ள' படத்தில் என்னைப் பார்த்து விட்டு ""நீ நல்லா நடிச்சிருக்கே'' என்று சொன்னார்கள். விஜய் மில்டன் சாருக்கு நன்றி. எனக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் வேண்டும். "அஞ்சான்' படத்தில் பிகினி உடையில் வந்த போது நிறைய விமர்சனங்கள் வந்தது. அதன் பின் அது சகஜமாகி விட்டது.  இப்போது வந்திருக்கிற "தங்க மகன்' படத்தில் குடும்ப பாங்கான பெண் வேடம். சமந்தான்னா இப்படித்தான் என ஒரு இமேஜ் வந்துவிடக் கூடாது. அதுதான் "அஞ்சான்' பிகினி, "பத்து எண்றதுக்குள்ள' வில்லி வேடம், "தங்க மகன்' குடும்ப பெண் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டுகிறேன். விக்ரம் மாதிரி பெரிய மாஸ் நடிகர் உள்ள படத்தில் என் நடிப்பையும் பேசுறாங்களே என்கிற போது சந்தோஷம்தான்.  

நயன்தாரா, ஸ்ருதிஹாசன், தமன்னா என எங்கு சென்றாலும் போட்டி இருப்பதை  எப்படிச் சமாளிக்கிறீங்க?

சினிமாவில் போட்டி இல்லாமல் எப்படி? ஆனால், போட்டி நல்லதுதானே. இருந்தாலும் இது ஆரோக்கியமான போட்டி. எங்கு பார்த்தாலும் புன்னகைத்து கைக் குலுக்கிற மனசு எல்லோருக்கும் இருக்கிறது. அது போதும்.

"பெங்களூர் டேஸ்' தமிழ் ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக இருந்தது... இப்போது அந்த இடத்தில் ஸ்ரீதிவ்யா...?

"பெங்களூரு டேஸ்' நஸ்ரியா கேரக்டர். எனக்கு பிடித்தமான ஒன்று. அதை தவற விட்டு விட்டோமே என்று தோன்றியது. இப்போது அதன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க என்னைக் கேட்டிருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. கடைசி நேரத்தில் அது என்னிடம் இருந்து சென்று விட்டது.

நல்ல காரியங்கள் நிறைய செய்து வருவதாக செய்திகள் வருகின்றன... ஆனால் அதை பற்றி எந்த இடத்திலும் நீங்கள் பேசுவதே இல்லை...?

மனதிருப்திக்காக ஒரு என்.ஜி.ஓ நடத்தி வருகிறேன். ஆள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதுதான் நோக்கம். அரசின் அனுமதி வாங்கி கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறேன். சினிமா, மாடல், விளம்பரம் என எல்லா இடங்களிலும் எனக்கு நல்ல சம்பளம் வருகிறது. அதை வைத்து பாதுகாப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இப்படி எதாவது நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இதை விளம்பரப்படுத்திக் கொள்ள எனக்குத் தோன்றவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT