மகளிர்மணி

எல்லா நடிகைக்கும் நடக்கிற விஷயம்தான்! சொல்கிறார் : சிருஷ்டி டாங்கே

ஆமாம்... அது உண்மைதான். வழக்கமான ஒரு ஹீரோயின் மாதிரி நடித்து விடக் கூடாதென ஆரம்பத்திலேயே

ஜி. அசோக்

"மேகா', "டார்லிங்',

"எனக்குள்

ஒருவன்',

"கத்துக்குட்டி' என சிருஷ்டி டாங்கே நடித்த ஒவ்வொரு

படமும் ஒவ்வொரு ரகம்.

"வில் அம்பு', "அச்சமின்றி',

"ஒரு நொடியில்' என அடுத்த

சுற்றிலும் அநேகப் படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.

அமைதியாக வந்து கவனம் கலைக்கிற விதமாக வளர்ந்திருக்கிறீர்களே...?

ஆமாம்... அது உண்மைதான். வழக்கமான ஒரு ஹீரோயின் மாதிரி நடித்து விடக் கூடாதென ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்டேன். அறிமுகமாகும்போது கெஸ்ட் ரோல் செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அப்போதுதான் ஹீரோயினாக நடிக்கும்போது தயக்கம் இருக்காது. என்னுடைய முதல் படம் மிஷ்கின் இயக்கிய "யுத்தம் செய்'. அந்தப் படத்தில் நடிக்கும்போது சினிமாவில் நடித்தால்போதும் என்கிற மன நிலையில் இருந்தேன். இப்போதுதான் சினிமா தெளிவாகப் புரிகிறது. அதற்கு உதாரணம்தான் சமீபத்தில் வந்த "கத்துக்குட்டி'. இப்போது  "அச்சமின்றி', "வில் அம்பு', "நவரச திலகம்' தவிர, தெலுங்கில் ஒரு படம் என்று தொடந்து நல்ல வாய்ப்புகள். இன்னும் இன்னும் நீங்கள் எதிர்பார்த்திராத இடங்களுக்குச் செல்லும் விதத்தில் இந்தப் படங்கள் எனக்கு அமையப் போகிறது.

 "ஒரு நொடியில்' பட ஸ்டில்ஸ் பற்றி நிறைய பேர் பேசியிருப்பார்களே... (கேள்வியை முடிப்பதற்கு முன்பாக...)

எல்லா ஹீரோயின்களுக்கும் இது நடக்கிற விஷயம்தான். இதில் பெரிதாக எடுத்துக் கொள்கிற அளவுக்கு ஒன்றும் இல்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்புகள் தேடி அலைவோம். அப்போது கிடைக்கிற ஒரு வாய்ப்பை தவற விடக் கூடாது என்ற நோக்கத்தில் சில சமரசங்களோடு அதை ஏற்றுக் கொள்வோம். அப்படித்தான் அந்தப் படம். ஆறு வருடங்களுக்கு முன்பு நடித்த படம் அது. இப்போதுதான் அது ரிலீஸôகப் போகிறது. இது எல்லா நடிகைக்கும் நடக்கிற விஷயம் தானே? இதனால் வருகிற வாய்ப்புகள் எனக்கு வராமல் போய் விடாது.

மார்டன் ஆடைகளில் அழகாவே இருக்கீங்க... ஆனால், நடிக்கும் போது பாவாடை, தாவணி மட்டும் ஏன்...?

எனக்கும் மார்டன் உடைகள்தான் பிடிக்கும். சொல்லப் போனால் "மேகா' படத்துக்குப் பின் பெரிய இடைவெளி விழுந்ததற்கு காரணம் இந்த காஸ்ட்யூம் பிரச்னைதான். அந்தப் படத்துக்குப்பின் வந்த எல்லா வாய்ப்புகளுமே "மேகா' மாதிரியான ஹோம்லி கதைகள். திரும்ப திரும்ப மேக்-அப் இல்லாமல் தாவணி மாட்டி விடலாம் என்று பார்த்தார்கள். சரி, கதையாவது சுவராஸ்யமாக இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதில் நானாகவேத் தேர்வு செய்து நடித்த கதைதான் "கத்துக்குட்டி'. இதுபோன்று சவாலான கதாபாத்திரமாக இருந்தால் ஆசை ஆசையாக நடித்துக் கொண்டே இருப்பேன்.

இன்னும் பெரிய ஹீரோக்களோடு பார்க்க முடியவில்லையே...?

நேரமே இல்லை. இதுவரை கமிட் ஆகியுள்ள படங்களையே எப்போது முடிப்பேன் என்று தெரியவில்லை. அதற்காக எந்த வாய்ப்பையும் தவற விட மாட்டேன். எனக்கு அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று விருப்பம் உள்ளது. மற்றபடி பெரிய சினிமா கனவுகள் இல்லை.

உங்களது கன்னக்குழிக்கு வந்த கமென்ட்ஸ்...?

நிறைய பேர் அதைப் பற்றிதான் பேசுவார்கள். அளவுக்கு மீறி சிலர் புகழும் போது வெட்கமாக இருக்கும். சில நேரங்களில் என் கன்னக்குழியை நானே பார்த்து பார்த்து ரசிப்பேன். சிலர் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் போது எரிச்சலாகவும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT