முகப்பு
மகளிர்மணி

அறிந்ததும் - அறியாததும்

 பிரிட்டிஷ் சமையற்கலை எழுத்தாளர். எலிசபெத் டேவிட்டின் முதல் சமையற்கலை புத்தகம், இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து நிலவிய கடுமையான

Updated On : 24 மே, 2016 at 1:10 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:50 PM

எலிசபெத் டேவிட்

 பிரிட்டிஷ் சமையற்கலை எழுத்தாளர். எலிசபெத் டேவிட்டின் முதல் சமையற்கலை புத்தகம், இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து நிலவிய கடுமையான உணவுப் பஞ்சமும், உணவுப் பங்கீட்டு முறையும் கலந்து 1950- இல் வெளிவந்தது. மத்தியத் தரைக் கடல் பிரதேசத்து உணவுப் புத்தகம் ( அ ஆர்ர்ஓ ர்ச் ஙஹக்ண்ற்ங்ழ்ழ்ஹய்ங்ஹய் ஊர்ர்க்)  என்பது அப்புத்தகத்தின் பெயர். உலகயுத்தம் முடிந்த கையோடு மேனாடுகளில் நிலவிய ஆள் பற்றாக் குறையால் வேலைக்காரர்கள்  கிடைப்பதும் அரிதாக இருந்த சமயத்தில் இப்புத்தகம் சமையல்காரர்களையும் பரிமாறுபவர்களையும் இதர எடுபிடி ஆட்களையும் இழந்து சமையலில் உற்சாகமிழந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் உல்லாசப் பயணங்களை மீண்டும் புதிய கோணத்தில் திட்டமிடவும், டின்னர் மேஜைகளை ஆர்வத்தோடு திரும்பிப் பார்க்கவும் பெரிதும் உதவிற்று.

 மேலும் நான்கு புத்தகங்களை எலிசபெத் வெளியிட்டார். ஊழ்ங்ய்ஸ்ரீட் ல்ழ்ர்ஸ்ண்ய்ங்ண்ஹப் ஸ்ரீர்ர்ந்ண்ய்ஞ் எனும் புத்தகம் 1960-இல் வெளிவந்த கையோடு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுப் போயின. வீட்டில் சமைப்பவர்களுக்கு இவருடைய புத்தகங்கள்  புதிய தைரியத்தை, புதுப்புது யோசனைகளை, சமையலில் தன்னம்பிக்கையை, பெருமையையெல்லாம் தந்தன.

Advertisement

 தொடர்ந்து பிறரால் எழுதப்பட்ட சாதாரணமான சமையல்கலை புத்தகங்களின் வெற்றியும் எலிசபெத்தின் புத்தகங்களின் பெருமையையும் தரமுமான நிலையாலேயே ஏற்பட்டது என்பது உண்மை.

 இவருடைய புத்தகங்கள் தந்த உற்சாகத்தாலும், உந்து சக்தியாலுந்தான் மேனாடுகளில் எங்கு பார்த்தாலும் சின்னஞ்சிறிய அமெச்சூர் வகை ரெஸ்டாரெண்டுகள் திறக்கப்பட்டன.

 எளிமையான சாப்பாட்டிற்காகவும் எளிமையான உணவுப் பரிமாறலுக்குமே நம்முடைய இப்போதைய காலத்தவர்கள் ஏங்குகிறார்கள். குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் ஆகும் சாப்பாட்டையே பெரும்பான்மை மக்கள் வரவேற்கிறார்கள். இது உண்மையான சமையற்கலைக்கு வேண்டிய வரவேற்பு'' என்று சொன்னவர் எலிசபெத்.

( "வரலாற்று நாயகர்கள்' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.