டிப்ஸ்... டிப்ஸ்...நலம் தரும் முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் போன்றவை குணமாகும்
மகளிர்மணிடிப்ஸ்... டிப்ஸ்...நலம் தரும் முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் போன்றவை குணமாகும்
• முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
• உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
• முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம். தோல் நோய்களும் நீங்கும்.
• ஆஸ்துமா, மார்புச் சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறு பிரச்னைகளுக்கு முருங்கைக் கீரை ரசம் அல்லது சூப் நல்ல பலன் தரும்.
• முருங்கைக் கீரைச் சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
• பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும் தன்மை கொண்டது முருங்கைக் கீரை.
• முருங்கை இலைகளை உலர்த்திப் பொடி செய்து வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னையின்போது ஒரு தேக்கரண்டி வாயிலிட்டு நீர் அருந்தினால் குணம் கிடைக்கும்.
• முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, இஞ்சி சாறுடன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். நன்கு பசியெடுக்கும் உணவும் மருந்தும்
• மாதவிலக்கு நாள்களில் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் உதிரப்போக்கால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும், உடலும் வலிமை பெறும்.
• ஆடுதொடா இலையில் வாரம் ஒருமுறை கசாயம் வைத்துச் சாபிட்டால் சளி, மார்புச் சளி தொந்தரவு வராது.
• மோரில் சோற்றுக் கற்றாழையைப் போட்டுச் சாப்பிட்டால் கண் எரிச்சல் இருக்காது.
• அவ்வப்போது ஒரு கை நிறைய வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பு எடுத்துச் சாப்பிட்டு வந்தால், இதய பாதிப்பு, இதய அதிர்வு மற்றும் இதய வியாதிகள் அண்டாது.
• தற்போது தேன் கலந்த பூண்டு ஐஸ்க்ரீம் கடையில் கிடைக்கிறது. விருந்து சாப்பாடு போன்று நன்கு சாப்பிட்ட பின்பு இதனைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
• வெந்தயம் அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிராது.
• மாதம் ஒருமுறை வேப்ப இலையைச் சாறெடுத்து பருகி வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து, வயிறு சுத்தமாகும்.
- சி.ஆர்.ஹரிஹரன்,
ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பொ.பாலாஜி