மகளிர்மணி

டாக்டரைக் கேளுங்கள்: கண் மருத்துவர் டாக்டர் சூசன் மார்த்தாண்டன் பதிலளிக்கிறார்...

தினமணி

டாக்டர், எனக்கு 48 வயது ஆகின்றது. இரண்டு கண்களிலும் - 3.00 Dsph பவர் உள்ளது. கண்ணாடிகளை அகற்ற ஏதேனும் வழி உள்ளதா?
- அமலா , திருச்சி.
Lasik சிகிச்சை உங்கள் -3.00 Dsph பவரைச் சரி செய்யும் ஆனாலும் 40 வயது மேற்பட்டவர்களுக்கு இயல்பாக ஏற்படும் வெள்ளெழுத்தினால் வரும் பார்வைக்
குறைபாட்டைச் சரி செய்ய இயலாது. இதனால் அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கண்ணாடிகளின் தேவை அவசியமாக இருக்கும். இந்தவெள்ளெழுத்துக் கண்ணாடிகளையும் தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் கண்களிலுள்ள இயற்கையான லென்ஸை அகற்றி பின்பு ஙன்ப்ற்ண் Multi focalஎனும் பிரத்யேக லென்சைக் கண்களுக்குள் பொருத்திவிடலாம். இதனால் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இரண்டுமே சரிசெய்யப்பட்டுவிடும்.

டாக்டர், எனக்கு 25 வயது ஆகின்றது. விரைவில் திருமணம் ஆகப்போகின்றது. கணினி அதிகம் உபயோகிப்பேன். மற்றும் தடித்த கண்ணாடிகள் அணிகின்றேன்.கண்ணாடியை அகற்ற ஏதேனும் வழி உள்ளதா?
- காமினி, ராயபுரம்.
கட்டாயமாக, உங்கள் தடித்த கண்ணாடிகளுக்குப் பதிலாக க் காண்டாக்ட் லென்ஸ்(CONTACT LENS) அணிந்து கொள்ளலாம். கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ் இவை இர ண்டும் வேண்டாம் எனில், Lasik எனப்படும் கருவிழியில்செய்யப்படும் ஒரு எளிய சிகிச்சை முறையைச் செய்து கொள்ளலாம்.இச்சிகிச்சை முறைக்குக் கருவிழி ஆரோக்கியமானதாகவும், போதுமான தடிமானம்உள்ளதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.

நான் "செமி சாப்ஃட்' லென்ஸ்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக உபயோகிக்கிறேன். இப்பொழுது ஏதேனும் புதிய லென்ஸ்கள் உள்ளனவா?
- மலர்க்கொடி, சேலம்.
சில ஆண்டுகளாகச் செமி சாப்ஃட் லென்ஸ்களை பெரும்பாலும் "கூம்புக்கரு விழி' (Keratoconus) எனப்படும் கருவிழியின் பிரச்னைக்குப் பயன்படுத்தப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் Rose -K மற்றும் Rose - K2 லென்ஸ்கள் கூம்புக்கருவிழிக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு 28 வயது ஆகின்றது. மேலும் எனக்கு அதிக பவர் கண்களில் உள்ளது. இதைச் சரி செய்ய முடியுமா?
- சந்தன குமரி, தஞ்சாவூர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் கண்களில் உள்ள பவர் சற்று ஏற்ற இறக்கமாகக் காணப்படும். இந்த ஏற்ற இறக்கம் மகப்பேறுமுடிந்து ஆறு மாத காலம் வரை இருக்குமாதலால் எந்த ஒரு கண் சிகிச்சையும் குறிப்பாகப் பார்வைக் குறைபாட்டிற்காகச் செய்யும் சிகிச்சையை இந்தகாலகட்டத்திற்குப் பின் செய்வது நன்மை பயக்கும்.

எனது இரண்டு வயது குழ ந்தைக்குச் சரியாகப் பொருட்களைப் பார்க்க முடிகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம்? நான் இன்னும் சில நாட்கள் காத்திருப்பதா? அல்லது கண் மருத்துவரிடம் இப்பொழுதே அழைத்துச் செல்வதா?
- பால திரிபுர சுந்தரி, கொட்டிவாக்கம்.
குழந்தையின் கண் பார்வை குறித்து உங்களுக்கு எவ்விதமான சந்தேகம் இருக்குமாயின் உடனே தங்களது குழந்தையைக் கண் மருத்துவரிடம் அழைத்துச்செல்லவும்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நான் இந்தியாவிற்கு ஒரு வார கால விடுமுறை யில் வருகின்றேன். இந்த ஒரு வாரத்திற்குள் Lasik சிகிச்சை செய்
துகொள்ள முடியுமா?
- ராணி, கனடா
கண்டிப்பாக, Lasik சிகிச்சைக்குத் தேவையான அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து தாங்கள் சிகிச்சைக்குத் தகுதியானவராக இருப்பின், தாராளமாக இந்தகாலவரையறைக்குள் செய்து கொள்ளலாம்.

என்னுடைய 5 வயது குழந்தைக்குக் கண் பார்வைக் குறைவாக உள்ளது. எவ்வித ஆகாரங்கள் அவள் கண்பார்வையை மேம்படுத்தும்?
- செங்கமலம், புதுச்சேரி.
காய்கறிகள், பழவகைகள், பருப்பு வகைகள் இவையனைத்தும் கண்களை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளாகும். இவற்றுள்குறிப்பாக கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, பப்பாளி, முட்டை, மீன் ஆகியவை சிறந்த கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின் A சத்து நிறைந்த உணவுவகைகளாகும்.

என்னுடைய கண் மருத்துவர் என் கருவிழியின் தடிமானம் குறைவாக உள்ளதாகக் கூறிவிட்டார். எனது கண்களின் பவர் -7.00ஈள்ல்ட் ஆகும். இதைச் சரிசெய்ய வழி ஏதாவது உள்ளதா?
-ரம்யா, ஸ்ரீபெரும்புதூர்.
முன்பே கூறியதுபோல ICL (Implantable Collamer Lens) உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையாக அமையும்.

என க்கு இரண்டு கண்களிலும் - 12.00Dsph உள்ளது. அதனால் Lasik சிகிச்சை செய்ய முடியாது என்று டாக்டர் கூறிவிட் டார். வேறு ஏதேனும் தீர்வுஉள்ளதா?
- கார்த்திகா, பூந்தமல்லி.
ICL (Implantable Collamer Lens) எனப்படும் சிகிச்சை முறையில், உங்கள் கண்களின் பவருக்கு ஏற்ப ஒரு பிரத்யேக லென்ûஸ உங்கள் கண்களுக்குள்
பொருத்திவிடுவோம். இது உங்கள் கண்கள் குறைபாட்டை சரி செய்துவிடும். அதிக பவர் உள்ளவர்களுக்கும் கருவிழியின் தடிமானம் போதுமானதாக
இல்லாதவர்களுக்கும் இந்தச் சிகிச்சைமுறை ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

என்னுடைய கருவிழியில் வைரஸ் கிருமி இப்பொழுது தாக்கியுள்ளது என்று டாக்டர் கூறி யுள்ளார். மேலும் அடிக்கடி கண்கள் சிவந்து போவதுமுண்டு.
கிட்டப்பார்வை என்னும் Myopia விற்காக கண்ணாடிகள் அணிகின்றேன். கண்ணாடிகளை அகற்ற இப்பொழுது ஏதேனும் தீர்வு உள்ளதா?
- சிவகாமி, புத்தூர்.
பொதுவாக, கருவிழியில் வைரஸ் கிருமி தாக்கியிருந்தால், குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது நாம் காத்திருத்தல் அவசிய மாகும். அதன் பின்னரே
கண்ணாடிகளை அகற்ற சிகிச்சையும் கருவிழியில் செய்யப்படும் Lasik முறையும் மேற்கொள்ளலாம்.
-ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT