முகப்பு
மகளிர்மணி

இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-2

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் வெளியே வேலைக்குச் சென்றுதான் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:43 PM
பகிர்:

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் வெளியே வேலைக்குச் சென்றுதான் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியேவும் ஏதேனும் சுயதொழில் அல்லது கைத்தொழில் செய்வதன் மூலம் குடும்பத்திற்கு ஒரு உபரி வருமானத்தை உண்டாக்க முடியும். மேலும் பெண்கள் தங்களது 
சின்னசின்ன தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதற்கும் இந்தப் பணம் உபயோகப்படும். இன்று சிறியதாக செய்துவரும் சுயத்தொழில் ஒரு நாளில் பெரிய அளவில் வளரவும் வாய்ப்புண்டு. எனவே, பெண்களே! கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ். 

  • வீட்டில் பழைய நியூஸ் பேப்பர் இருந்தால் அதை வைத்து லாண்டரி பேக் தயாரிக்கலாம். இவற்றை பெரிய ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யலாம். இவற்றை சுலபமாக தயாரிக்கமுடியும். அதுபோன்று மெடிக்கல் கவர், தாம்பூல பை போன்றவற்றையும் தயார் செய்து விற்கலாம்.
  • தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. அனைவருக்கும் குளிர்ச்சியாக பருக ஜுஸ் தேவைப்படும். அதனால் நாவிற்கு இனிய, பழச்சாறுகளைக் கொண்டு இயற்கை பழ ரசங்கள் தயார் செய்து கடைகளில் கொடுக்கலாம். நண்பர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம். இதில் வீட்டில் இருந்தபடியே கணிசமான வருமானத்தைப் பெற முடியும். 
  • தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளை, பலவித சம்மர் கோச்சிங் கிளாசிற்கு அனுப்போம். அதில் ஒன்று கேலிகிராஃபி (கையெழுத்துப் பயிற்சி) பயிற்சி வகுப்பு. இது தெரிந்தவர்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம். இது படிப்பு சம்பந்தமான பயிற்சி என்பதால் நல்ல வரவேற்பும் இருக்கும். பிள்ளைகளிடம் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். உங்களுக்கும் கணிசமான 
  • வருமானம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.