தெரிந்து கொள்வோம்! நோய்களை விரட்டும் கொய்யாப்பழம்!
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் நீங்கிவிடும்.
* ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் நீங்கிவிடும்.
* மலச்சிக்கல் பிரச்னைத் தீர தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் போதும்.
* கொய்யப் பழத்தை கடித்துச் சாப்பிடுவதால் பற்களும், ஈறுகளும் பலம் பெறும்.
Advertisement
Advertisement
* கொய்யாப்பழத்தைச் சாலட் போன்று சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.
* கொய்யா இலைகளை அரைத்து புண், காயங்களின் மேல் தடவி வர விரைவில் அவை ஆறிவிடும். கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* கொய்யாவில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சுத்தன்மையிலிருந்து காக்கிறது. ஆப்பிளை விட மிக அதிகமான சத்துக்கள் கொய்யாப் பழத்தில் உள்ளன. ஆரஞ்சு பழத்தோடு ஒப்பிட்டால் வைட்டமின் சி கொய்யாவில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளன.
* கொய்யாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வலுப் பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும்.
* கொய்யாவின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளதுதான். அதுபோன்று கெய்யாப்பழத்தில் உள்ள லைகோமைன் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
* புகை - மதுப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் நன்மை பெறலாம்.
* கொய்யாப்பழத்தைக் கழுவி தோலுடன் சாப்பிட்டு வர முகத்துக்குப் பொலிவையும் அழகையும் தருவதுடன் தோல் வறட்சியும், முதுமைத் தோற்றமும் நீங்கிவிடும்.
* நன்றாக பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள பித்தம், சோர்வு நீங்கும்.
* கொய்யா இலை போட்டு கொதிக்க வைத்த தேநீரை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.
* கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து தலையில் பற்றுபோட்டு வந்தால் கடுமையான தலைவலியும் குறைந்துவிடும்.
* கொய்யாவின் இளம் தளிர் இலைகளைக் கழுவி மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும். பின்னர் குளிர வைத்து வாய்க் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.
- சி.ஆர்.ஹரிஹரன்