தொழிலதிபர் குடும்பத்திலிருந்து ஒரு பாடகி
இந்திய தொழிலதிபர் குடும்பத்திலிருந்து முதன்முறையாக குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா. இசைத்துறையில் காலடி பதித்துள்ளார்.
இந்திய தொழிலதிபர் குடும்பத்திலிருந்து முதன்முறையாக குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா. இசைத்துறையில் காலடி பதித்துள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பட்டம் பெற்றுள்ள அனன்யா, தனியாக இசையமைத்து பாடிய "மென்ட் டுபீ' என்ற ஆங்கில பாடல். 2017- ஆம் ஆண்டு இந்திய இசைத் துறையின் பிளாட்டினம் சான்றிதழை பெற்றுள்ளது. இரண்டாவதாகவும் இசையமைத்து பாடியுள்ள லிவ்விங் "தி லைஃப்' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்லது. ஒரு குழுவை அமைத்து சர்வ தேச அளவில் பாடல்களை இசையமைத்து ஆல்பமொன்றை வெளியிடப்போவதாக கூறுகிறார் அனன்யா பிர்லா.