மகளிர்மணி

உலகம் சுற்றும் ராணி

DIN

கெய்ரோவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் பட்டம் பெற்ற ரானியா, ஒரு வங்கியில் பணியாற்றினார். அதன் பின்னர், ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றினார். 1993-ஆம் ஆண்டு ஜோர்டான் மன்னர் அப்துல்லா - 2 ஐ ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது! திருமணம் செய்து கொண்டனர். 1999-ஆம் ஆண்டு மன்னர் அப்துல்லா - 2 ஜோர்டனின் அரசராகப் பதவியேற்றார். ரானியா ராணியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இன்று உலகம் முழுவதும் பயணிக்கும் ரானியா, டேவிட் கேமரூன், ஆஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பல பிரபலங்களைச் சந்திக்கிறார். இவரை சமூக வலைதளங்களில் 70 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். ரானியாவின் அழகு மற்றும் பேஷன் குறிப்புகளுக்குத்தான் பல ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகள் தொடர்பான 4 புத்தகங்கள் எழுதியுள்ளார். ரானியாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் இரண்டு. சினிமா மற்றும் பாப்கார்ன்.
- ராஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT