கேரளத்தின் முதல் பெண் அர்ச்சகர்!
திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதற்கு கீழ் செயல்படும் 124 கோயில்களுக்கு சமீபத்தில் அர்ச்சகர்களை நியமித்தது.
திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதற்கு கீழ் செயல்படும் 124 கோயில்களுக்கு சமீபத்தில் அர்ச்சகர்களை நியமித்தது. அதில் 36 பேர் பிராமணர் அல்லாதோர். 36 பேரில் 6 பேல் தலித்துகள்! கேரளத்தில் நம்பூதிரிகள் பிரமாணர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கீழ் வரும் கோயில்களில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலும் உண்டு.
இந்த புதிய அர்ச்சகர்கள் நியமனத்தில் 18 வயதான ஜியோட்சனாவும் ஒருவர். இவர் திரிச்சூர் காட்டூர் அருகிலுள்ள பொன்ஜானத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ண கோயிலுக்கு அர்ச்சகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் காலடி ஸ்ரீசங்கரா கல்லூரியில் பி.ஏ.சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவியும் கூட!
சிறு வயதிலிருந்தே இவருக்கு மந்திரங்களில் ஈடுபாடு உண்டு. 12 வயதிலேயே ஓர் அம்மனைப் பிரதிஷ்டை செய்த அனுபவமும் உண்டு. இவருடைய தந்தை பத்மநாபன் நம்பூதிரி, திரிபிராயர் ஸ்ரீராமர் கோயிலில் முதன்மை அர்ச்சகராக இருக்கிறார்!
பெண் இல்லாத ஆண் முழுமை கிடையாது. உண்மையில் பெண்தான் சக்தி! உருவாக்குபவர்! சிவன் அதனை இயக்குபவர்...இருவரும் இணையாமல் முழுமை இல்லை. ஆன்மிகத் தூண்டுதல் ஆண்களைவிட பெண்களுக்கே முதலில் வருகிறது. ஆக இந்தத் தொழிலுக்கு பெண்கள் பொருத்தமானவர்களே. ஜியோட்சனாவைப் பொருத்தவரை பூஜை செய்வது ஓர் உபாசனை. அதே சமயம் இவர் நிரந்தர அர்ச்சகர் ஆவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லையாம். மாறாக தந்திரம் } மந்திரம் பற்றி ஆய்வு செய்ய விரும்புகிறாராம்.
ஆனால்...துணிவாக அர்ச்சகர் தொழிலைத் தேர்ந்தெடுத்த ஒரே பெண்மணி இவர்தான்.