முகப்பு
மகளிர்மணி

முதலில் பணம்  சம்பாதி!

அமெரிக்க முன்னாள்  ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி  மிச்சல் ஒபாமா சமீபத்தில்  தன் சுயசரிதையை எழுதி வெளியிட்டார்.

Updated On : 4 ஏப்ரல், 2019 at 1:53 PM
பகிர்:

அமெரிக்க முன்னாள்  ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி  மிச்சல் ஒபாமா சமீபத்தில்  தன் சுயசரிதையை எழுதி வெளியிட்டார்.

மிச்சல் ஒபாமா திருமணத்துக்கு  முன் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.  அப்போது வழக்கு சார்ந்து  ஏராளமான ஆவணங்களை தயாரிக்க வேண்டியிருந்தது. 

நாளடைவில்  அந்தப் பணி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தவே, தன்னுடைய அம்மா மரியான் ஷீல்ட்ஸ் ராபின்சனிடம் இதனைக்  கூறி, ""மகிழ்ச்சியாகவே இல்லை'' என்று சொல்லி அலுத்துக் கொண்டாராம்.

Advertisement

இதனைக்  கேட்ட  அவரது தாயார் கொடுத்த பதில், ""முதலில் பணம் சம்பாதிக்க முயற்சி செய், பிறகு மகிழ்ச்சியாக இருப்பது  பற்றி கவலைப்படலாம்''  என்றாராம்.

இது மிச்சல்  ஒபாமாவின் மனதை மாற்றி,  வேலையில் கூடுதல்  ஆர்வத்துடன் பணிபுரிய உதவியதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.